தோழி !
என்னை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
ஒவ்வொரு நாள்
இரவிலும்
சில நிமிடங்களாவது
உன்னை
நினைப்பதற்கு
மறந்ததில்லை !
அப்போதெல்லாம்
மனம்
உலைகொதிப்பது போல
கொதிக்கிறது !
காட்சிகள்
ஒன்றன்பின்
ஒன்றாக
மாறி மாறி
அணி வகுத்து வருகின்றன!
கடும்
தூசிப்படலங்களுக்கிடையில்
முகம் மூடிக்கிடக்கின்ற
பழைய புகைப்படத்தை போல
எனதின்
பழைய பதிவுகளில்
பெரும்பாலானவை
இன்னும்
தூசித்தட்டப்படாமலேயே
கிடக்கின்றன!
எனது
அனுபவங்களின்
நிறங்களின்
தொகுப்புகளில்
எதை
முதன்மை படுத்துவது
என்ற தடுமாற்றத்திலேயே
காலங்கள்
பல கடந்துவிட்டன!
நிறங்கள்
பல
தனது பொலிவை இழந்துவிட்டன!
ஆனாலும்
அதில்
ஒரு சில மட்டும்
முகம் காட்டி
இன்னும்
ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன!
உன்னை
சுமந்து
நான் நடைபயின்ற
புகை வண்டி பாதை
அகன்ற பாதையானதால்
பாதைசாரிகள்
யாரும்
நடந்து செல்வதில்லை
என
சொல்கிறார்கள் !
நாம்
நிழலுக்கு
ஒதுங்கிய
பெரும்பாலான
மரங்களை காணவில்லை !
பெரும்பாலான
மரங்கள்
சாலையை
அகலப்படுத்தவேண்டி
வெட்டி அகற்றப்பட்டுள்ளன !
தேங்காயை போல
ருசியாய் இருப்பதால்
அந்த மாமரத்தை
தேங்காய் மரம் என்போமே!
அந்த மரத்தின்
அடிச்சுவடே
தெரியவில்லை!
நாம்
நடந்து போகும்பாதையில்
வழக்கமாக
வண்ணார்கள்
துணி துவைத்துகொண்டிருப்பார்களே
அந்த
வண்ணான் குட்டையையும்
எங்கோ
தொலைந்து போயிருக்கின்றன !
நீயும்
உன் தோழிகளும்
ஒற்றையடி
புகைவண்டி பாதை வழியே
ஓரக்கண்ணால்
எங்களை
பார்த்தும் பார்க்காதவாறும்
போவீர்கள்!
நாங்கள்
அந்த பார்வைக்கு பொருள் தேடி தேடி
அடுத்தவாரம் வரை
அனைவரும்
குழம்பி நிற்போம் !
அதை பற்றியெல்லாம்
ஏதும் தெரியாதது போல்
அடுத்தடுத்து
சிரித்துவைப்பீர்கள்!
அடுத்தவர்களின்
கண்களை
அழவைத்து
பார்ப்பதில்தான்
உங்களின்
கண்களுக்கு
எவ்வளவு ஆசை ..!
அளவோடு
சிரித்து சிரித்து
எங்களை
ஆண்டுகணக்கில்
குழப்பிகொண்டிருந்த குழப்பம்
இன்றும்
தொடர்கிறது !
அந்த
சிரிப்பின் மிச்சம்
என்
குருதி அணுக்களில்
இன்னும்
என்னை
இயக்குகின்றன !
அன்று
தினந்தோறும்
கால் நடையாகத்தான்
நடந்து போவோம் !
செருப்பு
அணியாத
நாங்கள்
கால் வலி
தாங்கமாட்டாமல்
இருவர்
இருவராக
தண்டவாளத்தில்
நடந்து சென்றுகொண்டிருப்போம்!
தமிழரசி
தலைமையில்
நீங்கள்
ஒருவர் பின்
ஒருவராக
இடைவெளிவிட்டு
சென்று கொண்டிருப்பீர்கள் !
நாங்கள்
உங்களுக்கு
ஆசை ஆசையாக
நாவல் பழங்கள்
பறித்துகொடுப்போம் !
இப்போது
அந்த
நாவல் பழ மரங்களை
காணவில்லை !
நீங்கள்
வரும்போதும்
போகும்போதும்
நாங்கள்
உட்கார்ந்து டாவடித்த
புகைவண்டி சாலையின்
மதகுகள் அகற்றப்பட்டு
அங்கு
புதிய
சுரங்கப்பாதை
அமைக்கப்பட்டிருக்கின்றன!
இடங்கள்
முற்றிலும்
இடம் பெயர்ந்துள்ளன
எனினும்...
எத்தனை முறை
நீங்கள்
எங்களை திட்டினாலும்
உங்களிடம் மட்டுமே
எங்களுக்கு
மீண்டும்
மீண்டும்
அவமானப்பட
ஆசையாயிருந்தது!
என்னதான்
நீங்கள்
தூர விலகி விலகி சென்றாலும்
உங்களிடம்
மட்டுமே
மீண்டும் மீண்டும்
தோற்றுப்போவதில்
எங்களுக்கு
விருப்பமாயிருந்தது!
உங்கள்
உதாசீனங்கள்
அனைத்தையும் தொகுத்து
மயில் இறகை
புத்தகத்தில்
வைத்து
கோழி
தன் குஞ்சை
அடைக்காப்பதை போல
அடைக்காத்து வந்தோம் !
காதல்
இல்லையென்று
எத்தனை முறை
அடித்து கூறினாலும்
உங்களை அறியாமலேயே
எங்களுக்குள்
உங்களை
விதைத்துகொண்டிருந்தீர்கள்!
முன்பு
கொடுந்தீயாக...
பின்னர்
மென்மையான தீபமாய்
உள்ளுக்குள்
உருமாற்றம் பெற்றீர்கள்!
வானத்தை
வில்லாய் வளைக்க தெரிந்தது!
இறக்கை இல்லாமலேயே
எங்கும்
பறக்க முடிந்தது!
தூரங்கள்
சலிப்பை ஏற்படுத்தவில்லை!
விரல்களால்
மிக எளிதாக
அதன் பரிமாணத்தை
அளவீடு செய்ய முடிந்தது!
புகைவண்டி
போனபின்பும்
அது கடைசி வரை சென்று
பார்வையிலிருந்து
மறையும் வரை
அதன்
கடைசி பெட்டியை
கனத்த
மனதோடு
தினந்தோரும்
காத்திருந்து
பார்த்து பார்த்து
எதையோ
நம்மிலிருந்து
யாரோ
எதையோ
எடுத்துகொண்டு போவது போல
ஏக்கத்துடன் திரும்பிய நாட்கள்
இன்னும்
எனக்குள்
உயிருடன் இருக்கின்றன!
ஆனால்
உன்னை
ஆண்டாண்டு காலம்
நினைந்து ... நினைந்து
நான்
தொடர்ந்து
சாகவேண்டும்
என்பதற்காகவே
என்
பார்வையின் விண்ணப்பத்தை
கடைசிவரை
பரிசீலிக்காமலேயே
விட்டுவிட்டாய் !
என்னை
மெள்ள மெள்ள
மறந்து போயிருப்பாய்!
உனது நாட்களின்
பதிவுகளில்
நான்
இல்லாமல் போயிருக்கலாம்!
ஆனாலும்
நீ
எனக்கு கொடுத்த
நெல்லிக்காய்
தொடர்ந்து
இன்னும்
எனக்குள்
இனித்து வருகிறது!
ஆனால்
எனது வாழ்க்கை
தொடர்ந்து
நெல்லிக்காயாக
கசப்பினை
கக்கி வருகிறது !
ஆடி
அமாவாசைக்கு
வைத்த
ஆதண்டங்காய் குழம்பின்
சுவை
இன்னும்
என் நாவில்
மிச்சமிருக்கிறது !
உன்னை
அடிக்கடி
நினைத்துகொள்ள
எனது
சேமிப்பில்
உனது
பரிசுப்பொருட்கள்
ஏதும் இல்லாமல் போயிருக்கலாம்
ஆனாலும்
உனது
புன்னகையை
இன்னும்
செலவு செய்யாமல்
அப்படியே
சேமித்து வைத்திருக்கிறேன்!
அந்த
புன்னகை
பூக்கள்மீது
சின்ன சின்ன கவிதைகளால்
பூசிக்கிறேன்!
வாழக்கை
வெகுவாக
சாயம் வெளுத்து
சோம்பி
நிற்கின்றன!
கடந்த
சம்பவங்களின்
எச்சங்கள்
எங்காவது
மிச்சமிருக்கிறாதா
என
என் கண்கள்
தேடி அலைகின்றன!
நீ
ஓடி விளையாடிய
பல்வேறு
இடங்களில்
புதிய வீடுகள் முளைத்துவிட்டன!
பனைமரத்தோப்புகளில்
குடுக்கை வௌவ்வால்கள்
கொண்டுவந்து போடும்
வாதாங்கொட்டைகளை
பொறுக்கிய
இடங்களிலெல்லாம்
தற்போது
பனைமரங்கள் இல்லை !
விளாம்பழம்
பரித்து சாப்பிட்ட
விளாம் மரமும் இல்லை!
விளாம் மரம்
இருந்த இடமும்
வெறிச்சோடி போய்விட்டன!
புகை வண்டி
பாலத்தின் மீது
கைகளில்
புத்தகங்களோடு நான்...
மாடுகளின்
கழுத்துமணி
டாண் டாண்--
என
ஒலியெழுப்பும்...
ஆடுகள்
ஒன்றோடு ஒன்று
முட்டி மோதிக்கொண்டு
பாலத்தின் கீழே
மேற்கு நோக்கி போகும்...
கொல்லை காட்டுக்கு
கூலிவேலைக்கு
போகும்
ஜனங்க
ஒருவருக்கொருவர்
வேகமாக பேசிக்கொண்டு செல்வார்கள்!
ஒரு
மகா கவியாய்
தன்னை கற்பனையில்
உருவகித்துகொண்டு
உன்னை
நினைத்து
கவிதையென
எதையாவது
எழுதிக்கொண்டிருப்பேன்!
அது கடைசியில்
அனைத்தும்
உனது பெயர்களாகத்தான்
இருக்கும் !
நேற்று
பெய்த மழையின்
மென்மையான ஈரக்காற்றின்
அமைதியூனூடே
வேலமரத்து வண்டுகள்
கத்தும் ஓசை
காதுகளின் வழியாக
ஆண்டுகணக்காக
கேட்டு கேட்டு
ஏதோ
இனம் புரியாத ஒன்றை
என்
மவுனத்தில்
லயிக்க வைக்கும்!
மிகப்பலமாக
சம்பணமிட்டு
உட்கார்ந்து கொண்டு
அடம்பிடித்து
அழுதுகொண்டிருந்த
உன் நினைவுகளுக்கு
காற்றோடும்
மரங்களோடும்
பூக்களோடும்
சினேகிக்க
சொல்லிக்கொடுத்தேன்!
இந்த மண்ணோடும்
இந்த ஊரோடும்
நான்
சுவாசித்த
உயிர் காற்று,
என்னை
இயக்கும்
ஸ்தூலமான
உறவுகளின் பின்னணி!
தொடர்ந்து
என்னை
நினைக்கத்தூண்டும்
என் கடந்த கால
சூழலின்
அழகான
மிச்சங்கள்!
எத்தனை
ஆண்டுகள் போனாலும்
எந்த
வற்புறுத்தலுக்கும்
உள்ளாகாமல்
உன்னை
எப்போதும்
இயல்பாக
நினைத்து வைக்கிறேன்!
நீ
எந்த
யுகத்தில்
இருக்கிறாய்
என்பது கூட
இன்னும்
தெரிந்து கொள்ள
விரும்பாமலேயே

என்னை
உனக்கு ஞாபகம் இருக்கிறதா?
ஒவ்வொரு நாள்
இரவிலும்
சில நிமிடங்களாவது
உன்னை
நினைப்பதற்கு
மறந்ததில்லை !
அப்போதெல்லாம்
மனம்
உலைகொதிப்பது போல
கொதிக்கிறது !
காட்சிகள்
ஒன்றன்பின்
ஒன்றாக
மாறி மாறி
அணி வகுத்து வருகின்றன!
கடும்
தூசிப்படலங்களுக்கிடையில்
முகம் மூடிக்கிடக்கின்ற
பழைய புகைப்படத்தை போல
எனதின்
பழைய பதிவுகளில்
பெரும்பாலானவை
இன்னும்
தூசித்தட்டப்படாமலேயே
கிடக்கின்றன!
எனது
அனுபவங்களின்
நிறங்களின்
தொகுப்புகளில்
எதை
முதன்மை படுத்துவது
என்ற தடுமாற்றத்திலேயே
காலங்கள்
பல கடந்துவிட்டன!
நிறங்கள்
பல
தனது பொலிவை இழந்துவிட்டன!
ஆனாலும்
அதில்
ஒரு சில மட்டும்
முகம் காட்டி
இன்னும்
ஒளிவீசிக்கொண்டிருக்கின்றன!
உன்னை
சுமந்து
நான் நடைபயின்ற
புகை வண்டி பாதை
அகன்ற பாதையானதால்
பாதைசாரிகள்
யாரும்
நடந்து செல்வதில்லை
என
சொல்கிறார்கள் !
நாம்
நிழலுக்கு
ஒதுங்கிய
பெரும்பாலான
மரங்களை காணவில்லை !
பெரும்பாலான
மரங்கள்
சாலையை
அகலப்படுத்தவேண்டி
வெட்டி அகற்றப்பட்டுள்ளன !
தேங்காயை போல
ருசியாய் இருப்பதால்
அந்த மாமரத்தை
தேங்காய் மரம் என்போமே!
அந்த மரத்தின்
அடிச்சுவடே
தெரியவில்லை!
நாம்
நடந்து போகும்பாதையில்
வழக்கமாக
வண்ணார்கள்
துணி துவைத்துகொண்டிருப்பார்களே
அந்த
வண்ணான் குட்டையையும்
எங்கோ
தொலைந்து போயிருக்கின்றன !
நீயும்
உன் தோழிகளும்
ஒற்றையடி
புகைவண்டி பாதை வழியே
ஓரக்கண்ணால்
எங்களை
பார்த்தும் பார்க்காதவாறும்
போவீர்கள்!
நாங்கள்
அந்த பார்வைக்கு பொருள் தேடி தேடி
அடுத்தவாரம் வரை
அனைவரும்
குழம்பி நிற்போம் !
அதை பற்றியெல்லாம்
ஏதும் தெரியாதது போல்
அடுத்தடுத்து
சிரித்துவைப்பீர்கள்!
அடுத்தவர்களின்
கண்களை
அழவைத்து
பார்ப்பதில்தான்
உங்களின்
கண்களுக்கு
எவ்வளவு ஆசை ..!
அளவோடு
சிரித்து சிரித்து
எங்களை
ஆண்டுகணக்கில்
குழப்பிகொண்டிருந்த குழப்பம்
இன்றும்
தொடர்கிறது !
அந்த
சிரிப்பின் மிச்சம்
என்
குருதி அணுக்களில்
இன்னும்
என்னை
இயக்குகின்றன !
அன்று
தினந்தோறும்
கால் நடையாகத்தான்
நடந்து போவோம் !
செருப்பு
அணியாத
நாங்கள்
கால் வலி
தாங்கமாட்டாமல்
இருவர்
இருவராக
தண்டவாளத்தில்
நடந்து சென்றுகொண்டிருப்போம்!
தமிழரசி
தலைமையில்
நீங்கள்
ஒருவர் பின்
ஒருவராக
இடைவெளிவிட்டு
சென்று கொண்டிருப்பீர்கள் !
நாங்கள்
உங்களுக்கு
ஆசை ஆசையாக
நாவல் பழங்கள்
பறித்துகொடுப்போம் !
இப்போது
அந்த
நாவல் பழ மரங்களை
காணவில்லை !
நீங்கள்
வரும்போதும்
போகும்போதும்
நாங்கள்
உட்கார்ந்து டாவடித்த
புகைவண்டி சாலையின்
மதகுகள் அகற்றப்பட்டு
அங்கு
புதிய
சுரங்கப்பாதை
அமைக்கப்பட்டிருக்கின்றன!
இடங்கள்
முற்றிலும்
இடம் பெயர்ந்துள்ளன
எனினும்...
எத்தனை முறை
நீங்கள்
எங்களை திட்டினாலும்
உங்களிடம் மட்டுமே
எங்களுக்கு
மீண்டும்
மீண்டும்
அவமானப்பட
ஆசையாயிருந்தது!
என்னதான்
நீங்கள்
தூர விலகி விலகி சென்றாலும்
உங்களிடம்
மட்டுமே
மீண்டும் மீண்டும்
தோற்றுப்போவதில்
எங்களுக்கு
விருப்பமாயிருந்தது!
உங்கள்
உதாசீனங்கள்
அனைத்தையும் தொகுத்து
மயில் இறகை
புத்தகத்தில்
வைத்து
கோழி
தன் குஞ்சை
அடைக்காப்பதை போல
அடைக்காத்து வந்தோம் !
காதல்
இல்லையென்று
எத்தனை முறை
அடித்து கூறினாலும்
உங்களை அறியாமலேயே
எங்களுக்குள்
உங்களை
விதைத்துகொண்டிருந்தீர்கள்!
முன்பு
கொடுந்தீயாக...
பின்னர்
மென்மையான தீபமாய்
உள்ளுக்குள்
உருமாற்றம் பெற்றீர்கள்!
வானத்தை
வில்லாய் வளைக்க தெரிந்தது!
இறக்கை இல்லாமலேயே
எங்கும்
பறக்க முடிந்தது!
தூரங்கள்
சலிப்பை ஏற்படுத்தவில்லை!
விரல்களால்
மிக எளிதாக
அதன் பரிமாணத்தை
அளவீடு செய்ய முடிந்தது!
புகைவண்டி
போனபின்பும்
அது கடைசி வரை சென்று
பார்வையிலிருந்து
மறையும் வரை
அதன்
கடைசி பெட்டியை
கனத்த
மனதோடு
தினந்தோரும்
காத்திருந்து
பார்த்து பார்த்து
எதையோ
நம்மிலிருந்து
யாரோ
எதையோ
எடுத்துகொண்டு போவது போல
ஏக்கத்துடன் திரும்பிய நாட்கள்
இன்னும்
எனக்குள்
உயிருடன் இருக்கின்றன!
ஆனால்
உன்னை
ஆண்டாண்டு காலம்
நினைந்து ... நினைந்து
நான்
தொடர்ந்து
சாகவேண்டும்
என்பதற்காகவே
என்
பார்வையின் விண்ணப்பத்தை
கடைசிவரை
பரிசீலிக்காமலேயே
விட்டுவிட்டாய் !
என்னை
மெள்ள மெள்ள
மறந்து போயிருப்பாய்!
உனது நாட்களின்
பதிவுகளில்
நான்
இல்லாமல் போயிருக்கலாம்!
ஆனாலும்
நீ
எனக்கு கொடுத்த
நெல்லிக்காய்
தொடர்ந்து
இன்னும்
எனக்குள்
இனித்து வருகிறது!
ஆனால்
எனது வாழ்க்கை
தொடர்ந்து
நெல்லிக்காயாக
கசப்பினை
கக்கி வருகிறது !
ஆடி
அமாவாசைக்கு
வைத்த
ஆதண்டங்காய் குழம்பின்
சுவை
இன்னும்
என் நாவில்
மிச்சமிருக்கிறது !
உன்னை
அடிக்கடி
நினைத்துகொள்ள
எனது
சேமிப்பில்
உனது
பரிசுப்பொருட்கள்
ஏதும் இல்லாமல் போயிருக்கலாம்
ஆனாலும்
உனது
புன்னகையை
இன்னும்
செலவு செய்யாமல்
அப்படியே
சேமித்து வைத்திருக்கிறேன்!
அந்த
புன்னகை
பூக்கள்மீது
சின்ன சின்ன கவிதைகளால்
பூசிக்கிறேன்!
வாழக்கை
வெகுவாக
சாயம் வெளுத்து
சோம்பி
நிற்கின்றன!
கடந்த
சம்பவங்களின்
எச்சங்கள்
எங்காவது
மிச்சமிருக்கிறாதா
என
என் கண்கள்
தேடி அலைகின்றன!
நீ
ஓடி விளையாடிய
பல்வேறு
இடங்களில்
புதிய வீடுகள் முளைத்துவிட்டன!
பனைமரத்தோப்புகளில்
குடுக்கை வௌவ்வால்கள்
கொண்டுவந்து போடும்
வாதாங்கொட்டைகளை
பொறுக்கிய
இடங்களிலெல்லாம்
தற்போது
பனைமரங்கள் இல்லை !
விளாம்பழம்
பரித்து சாப்பிட்ட
விளாம் மரமும் இல்லை!
விளாம் மரம்
இருந்த இடமும்
வெறிச்சோடி போய்விட்டன!
புகை வண்டி
பாலத்தின் மீது
கைகளில்
புத்தகங்களோடு நான்...
மாடுகளின்
கழுத்துமணி
டாண் டாண்--
என
ஒலியெழுப்பும்...
ஆடுகள்
ஒன்றோடு ஒன்று
முட்டி மோதிக்கொண்டு
பாலத்தின் கீழே
மேற்கு நோக்கி போகும்...
கொல்லை காட்டுக்கு
கூலிவேலைக்கு
போகும்
ஜனங்க
ஒருவருக்கொருவர்
வேகமாக பேசிக்கொண்டு செல்வார்கள்!
ஒரு
மகா கவியாய்
தன்னை கற்பனையில்
உருவகித்துகொண்டு
உன்னை
நினைத்து
கவிதையென
எதையாவது
எழுதிக்கொண்டிருப்பேன்!
அது கடைசியில்
அனைத்தும்
உனது பெயர்களாகத்தான்
இருக்கும் !
நேற்று
பெய்த மழையின்
மென்மையான ஈரக்காற்றின்
அமைதியூனூடே
வேலமரத்து வண்டுகள்
கத்தும் ஓசை
காதுகளின் வழியாக
ஆண்டுகணக்காக
கேட்டு கேட்டு
ஏதோ
இனம் புரியாத ஒன்றை
என்
மவுனத்தில்
லயிக்க வைக்கும்!
மிகப்பலமாக
சம்பணமிட்டு
உட்கார்ந்து கொண்டு
அடம்பிடித்து
அழுதுகொண்டிருந்த
உன் நினைவுகளுக்கு
காற்றோடும்
மரங்களோடும்
பூக்களோடும்
சினேகிக்க
சொல்லிக்கொடுத்தேன்!
இந்த மண்ணோடும்
இந்த ஊரோடும்
நான்
சுவாசித்த
உயிர் காற்று,
என்னை
இயக்கும்
ஸ்தூலமான
உறவுகளின் பின்னணி!
தொடர்ந்து
என்னை
நினைக்கத்தூண்டும்
என் கடந்த கால
சூழலின்
அழகான
மிச்சங்கள்!
எத்தனை
ஆண்டுகள் போனாலும்
எந்த
வற்புறுத்தலுக்கும்
உள்ளாகாமல்
உன்னை
எப்போதும்
இயல்பாக
நினைத்து வைக்கிறேன்!
நீ
எந்த
யுகத்தில்
இருக்கிறாய்
என்பது கூட
இன்னும்
தெரிந்து கொள்ள
விரும்பாமலேயே