Sunday, 20 October 2019

இசை


Image may contain: night

வாயிதழலிருந்து
விடைபெறும்
சொற்கள்
விவரிக்க இயலாமல்
வழக்கொழிந்து
வழக்கம்போல
கூடு திரும்புகின்றன ! - எனினும்
எடுத்துக்கொண்ட கணத்தின்
ஆழ்ந்த பொருள் பொதிந்த
நுட்பங்களை
தன்வயப்படுத்திக்கொண்டு
பச்சை நெல் வயலுக்குள்
கடந்து செல்லும்
ஈரகாற்றாய்
எனக்குள் கடந்து செல்கிறது
இசை !"....