Sunday, 30 December 2018

மணம்

உன் புன்னகையின்
நெடுகிலும்
என் வலியின்  மணம்
நெஞ்சுமுட்ட
வீசுகிறது !


Image result for mental pain images

சலிப்புறும் அழைப்புகள்

யார் யாரோ வருகின்றார்கள்
யார் யாரோ போகின்றார்கள்
எவ்வளவு  ஆழமாக
நினைத்துப்பார்த்தாலும்
அவர்களின் அவர்களாக
தெரியவில்லை!

பயணம் நீள்கிறது 
பாதை குறைகிறது
நிலவின் முகப்பில்
இருள் கவ்வியிருக்கிறது !
நீளும் கரங்களில்
குருதி  வழிகிறது !

மெள்ள
புன்னகைக்க சொன்னாய் !
இதழ்களில்
அமிலம்  வழிகிறது !

எத்தனைதடவை
அழைத்தாலும்
மழை பொழிய மறுக்கிறது
வெறுப்புறும் வானம் !

எத்தனைதடவை
அழைத்தாலும்
ஒரே விதமாகத்தான் 
ஒன்றன்பின்
ஒன்றாய் நகர்கிறது
சலிப்புறும் அழைப்புகள் !

அருகருகே
இருந்தபோதிலும்
அடைக்கல கொடுக்க  மறுக்கின்றன
இருவரின்
நிழல்களும் !



Image result for love failure