கொடுப்பது போல்
கொடுத்து
வெடுக்கெனப்
பிடுங்கிக்கொள்கிறாய்
என்னிடமிருந்து
உன்னை !
ஓசையற்ற
மவுனத்தின் கைபிடித்து
இரவின் ஆழ்மனத்தில்
பயணத்து
அந்திம வெளியை
சென்றடைகிறது
வாழ்வின்
இடையறா ஒற்றை வெளி !"..
ஊசி என்றால்
தைக்காத
சொற்களின் மீதும்,
மழை என்றால்
பெய்யாத
வானத்தின் மீதும்,
பேசு என்றால்
பேசாத
கண்களின் மீதும்,
புன்னகை என்றால்
நகைக்காத
பூக்களின் மீதும்
எனக்கு
கோபம்