Thursday, 7 February 2019

காவேரி வந்தாள் (7)

Image result for a traditional tamil woman  in modern painting  free download
“காவேரி  உறங்கும்போதெல்லாம் அலமேலு அவளுக்கு அருகில்போய் அமர்ந்துகொண்டு அவள் உறங்குவதை வைத்த கண் வாங்காமல் பார்ப்பாள!’

அப்போதெல்லாம் தான் சின்னப்பெண்ணாய் இருந்தபோது தனது மாமியார் தன்னிடத்தில் நடந்துகொண்ட விதத்தைஎல்லாம் மனக்கண்முன் கொண்டுவந்து பார்ப்பாள்! தனது மாமியார் தன்னிடத்தில் நடந்துகொண்ட அந்த கடந்தகால கசப்பான ,கரடுமுரடான  அந்த  அனுபவங்களை தன் மருமகள் மீது வலிய திணிக்க விருமபவில்ல!”

”அது என்னோடு போகட்டும்”
“எனக்கு ஏற்பட்ட அனுபவம் யாருக்கும் வரவேண்டாம!”,
பொத்தாம் பொதுவில் அது அப்படியே என்னோடு போகட்டும் ! என தனக்குள் கூறிக்கொண்டாள்.

என்னை  தன்னை பெற்றவளாக உணரும் ஒரு மன நிலையில் காவேரி  இருப்பதாய் அலமேலு உணரந்துகொண்டாள்.ஊரில் வழங்கும் மருமகள் குறித்த கதைகளையெல்லாம்  கடந்து  நாளுக்கு நாள் அவள்மீது தன்னை அறியாமலேயே இனம் புரியாத ஒரு ஈர்ப்பு அவளுக்குள் வளர்ந்துகொண்டிருந்தது”

“சோறு ஆக்குதல்,குழம்பு வைத்தல்போக மாட்டுக்கு  சோளத்தட்டை நறுக்கிபோடுதல் ,காய்ந்த கடலைக்கொடியை போருபட்டியிலிருந்து  பிடுங்கிவந்து கவணையில் போடுதல் போன்ற வேலைகளைத்தவிர, காட்டிலிருந்து வரும் மாமனாருக்கு  சுடுதண்ணி போடுதல் போன்ற வேலைகளையும் காவேரி  செய்யத்தொடங்கினாள்!”

இதையெல்லாம் தொடர்ந்து உற்று கவனித்து வந்த  அலமேலு மருமகள் செய்யும் வேலைப்பளுவை   தாமும்  சுமக்க எண்ணினாள்.
அவளுக்கு இன்னும் ஒரு கவலை அடிமனசை அரித்துக்கொண்டிருந்தது. அவள் மருமகள் இன்னும் வயசுக்கு வரவில்லை.அந்த நிகழ்ச்சி முற்றாக முடிந்தால்தான் அவள் நினைக்கின்ற மற்றதுக்கு போக முடியும்.அந்த நிகழ்ச்சியை மிக சிக்கனமாக யாருக்கும் சொல்லாம அரவம் தெரியாம காதும் காதும் வைத்தது போல முடித்துவிடவேண்டும்
ஊரில் சொல்லி மாளவில்லை.உன் மருமகளுக்கு தெரட்டி எப்போது என புடுங்கி எடுக்கிராளுங்க.கேட்பதற்கு கொஞ்சம் கூச்சமாக இருக்கிறது என மனதுக்குள் நினைத்தவாறு மாட்டு கிடையில் கிடந்த மாட்டு சாணத்தை மெலாரால் கூட்டத்தொடங்கினாள் !”

“என்னடா தோட்டத்தில் “சரக்” “சரக்” என்ற சத்தம் வருகிறதே! என வீட்டின் உள்ளிருந்து கேங்க திடீரென வெளியே வந்தவள் சற்று அதிர்ந்த்போனவள்... கொஞ்சம் சுதாரித்துக்கொண்டவளாக,

“ஏன் அத்தை உனக்கு வேண்டாத வேலை?” ,இதெல்லாம் நான் பாத்துபேன்ல! என அலமேலுவின் கைகளிலிருந்த மெலாரை வெடுக்கென பிடுங்கி போருபட்டியின்மீது கொண்டுபோய் வைத்து விட்டாள்
காவேரி . அலமேலுவால மருமகளின்  அன்புக்கட்டளைக்கு பணிந்தவளாக “ஏதும் செய்ய இயலாமல் ஒரு கணம் திகைத்து  நின்றாள்”

பின்னர் ஒரு கணம் அவ்விடத்தைவிட்டு அகன்று  வீட்டுத்தின்னையின் போய் அமர்ந்தவாறு மெல்ல ஒவ்வொன்றாக யோசிக்க ஆரம்பித்தாள். இனி மருமகளின் இஷ்டத்திற்கு எல்லாவற்றையும் விட்டு விடுவது ,அடிக்கடி அதில் ஏதும் குறுக்கீடு செய்யாமல் ,அவள் என்னதான் செய்கிறாள் என்பதை தூரத்தில் இருந்து கவனிக்கவேண்டும் என தீர்மானித்தவளாய் ,அடுத்த வீட்டிலுள்ள பூரணத்தை பார்ப்பதற்கு அவள் வீட்டினுள் செல்ல ஆரம்பித்தாள் அலமேலு.”

ஆனால்....  காவேரி  வயசு குறைவானதாக இருந்தாலும் ஓரளவு அலமேலு உள்ளுக்குள் என்ன நினைக்கிறாள்  என்பதை  லேசாக உணரும் திறன்  உள்ளவளாக இருந்தாள்!”

ஆனால் அதையெல்லாம் வெளிப்படுத்தும் ஆற்றல் இல்லாத சின்ன குழந்தையாக இருந்தாள் ,எனினும்  எதை செய்தாலும் தம்முடைய குடும்பத்தின் நலனுக்காகத்தான் தனது  மாமியாள் எதையும் செய்வாள் என்ற பரஸ்பர நம்பிக்கை என்பது மாமியாள் மருமகளுக்கான இடையிலான பாசப்பிணைப்பை  மேலும் ஒன்றிணைக்கும் ஒரு மந்திரக்கயிரைப்போல இருந்தது.

காவேரி  இயல்பு  என்பது எந்த சந்தேகத்திற்கு அப்பாற்பட்ட ஒன்றாய் இருந்தது.” அவள் அந்த வீட்டிற்கு ஒரு  செல்லப்பிள்ளையை காட்சியளிக்க தொடங்கினாள் !’ 
      
“திடீரென ஒருநாள் பட்டித்தெருவிலுள்ள பெண்களெல்லாம் அலமேலுவின் வீட்டுத் தோட்டத்தில் முட்டு சேர்ந்திருந்தார்கள். அங்கும் இங்கும் பரப்பாக அலமேலு ஓடிக்கொண்டிருந்தாள்!’

அப்போதுதான் பொழுது சாய்ந்து கொண்டிருந்தாது, சுப்பிரமணியன் அப்போதுதான்  கூலிக்கு கிணறுவெட்டி விட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தான். 
வீட்டை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில்... “தனது வீட்டில் பெண்களும்,ஆண்களும் கும்பல்  கும்பலாக நின்றுகொண்டு பேசிக்கொண்டு இருப்பதை கண்டு  சுப்பிரமணியன் திடுக்கிட்டான்!” ஓரளவு மனதை திடப்படுத்திக்கொண்டு வீட்டை நெருங்கினான்.அந்த கூடத்திலிருந்த பக்கத்துவீட்டு பூரணம்

“தம்பி சுப்பிரமணியா ,பயப்படாத,இங்கு ஒன்னும் பயப்படுற மாதிரி இல்ல! உன் பொண்டாட்டி காவேரி  ஆளாயிருக்கா !” அதுக்கு  என்னப்பண்றதுன்னு ,உன்ன எதிர்பார்த்துக்கிட்டு இருக்கோம்!” அவ பொறந்த வீட்டுக்கு சேதியை சொல்லி அனுப்புறதா ?இல்ல நம்பளே தண்ணி ஊத்திவிடுவோமா என்பதை முடிவு பண்ணி சொல்லுங்கப்பா ! நேரம்வேற இருட்டிக்கிட்டு இருக்கு ! என சுப்பிரமணியனிடம் சொல்லி முடித்தாள்’

இதையெல்லாம் பொறுமையுடன் கேட்ட சுப்பிரமணி  “எனக்கு என்னத்த தெரியும்!”எதுவா இருந்தாலும் அம்மாவை கேட்டுக்ககுங்க!” எனக்கொன்னும் தெரியாது !” என அவனுடைய அம்மாவை நோக்கி கையை காட்டினான்.

இதை எதிர்பார்த்த அலமேலு தன் மகன் தன்மீது கொண்ட அன்பினையும்,நமபிகையையும் உணர்ந்தவளாக “சரி பூரணம் !” என பேச ஆரம்பித்த அலமேலு, தான் ஏற்கனவே முடிவு செய்துவைத்திருந்த தனது முடிவை ஒப்புவிக்கதொடங்கினாள்.

“இப்ப பெருசா காரியம் வைக்கிற அளவுக்கு நெலமை சரியில்லை.அதெல்லாம் பின்னாடி பாத்துக்குவோம்.இப்போதைக்கு நம்பளா தலைக்கு  தண்ணி ஊத்தி உள்ளே அழைச்சுக்குவோம்!” என ஒருவாறாக சொல்லிமுடித்த கையோடு தனது கணவன் பெருமாளை அழைத்த அலமேலு

“ஏய்யா” என,தனது கணவரை அழைத்த  அலமேலு நேரா செட்டிக்கடைக்கு போய் வெத்தலை பாக்கு முட்டாய் வாங்கிட்டு வா ! என  தன் கணவனை அனுப்பிவிட்டு ,மளமளவென சடங்கு செய்யும் வேலையில் இறங்கினாள்
தொடரும்....

No comments:

Post a Comment