அதன் பின்னர் தனது தந்தை பெருமாளோடு கொல்லைக்காட்டு வேலையை கற்றுக்கொள்ளத்
தொடங்கினான் சுப்பிரமணியன். கமலையேற்றம்,ஏர் உழவு , சத்தத்திற்கு வண்டி மாட்டு ஓட்டுதல் போன்ற வேலைகளை
மிக சின்னஞ்சிறிய வயதிலேயே தனது தாயோடு கற்றுக்கொள்ளத்தொடங்கினான்
இதற்குமேல் ஏதாவது பேசினால் தனது ஒரே மகன் ஏதாவது செய்து கொள்வான்
என்ற அச்சத்தில் மகனை பள்ளிக்கூடம்
அனுப்பும் முயற்சியை இத்துடன் விட்டு விட்டாள்.
அது
சுப்பிரமணியனுக்கு மிகவும் வசதியாக போய்விட்டது.அவன் பாட்டுக்கு அவிழ்த்துவிட்ட
மாட்டு கண்ணுக்குட்டையைப்போல கண்டபடி துள்ளத்தொடன்கினான். அவன் மனசுக்குள்
வசத்தகாலத்தின் மகரந்தக்கார்று வீசத்தொடங்கியது. என்னதான் பள்ளி என்ற சிறையிலிருந்து
அவனுக்கு விடுதலைக்கிடைத்தபோதும்,அவனது தாயின் அடிமனத்தின் ஓரத்தில் தனது மகன்
பள்ளிக்கூடத்திற்கு போகாதது பெரிய குறையாகவே இருந்தன.
காலங்கள் விரைவாக
கடக்கத்தொடங்கின. அதற்குள் நிறைய பார்ரங்கள் நடந்து முடிந்திருக்கின்றன.சுப்பிரமனியனும்
வளரத்தொடங்கினான். அதன பின்னர் சுப்பிரமணியனின் வாழ்க்கையின் போக்கு
வெகுவாக மாறத்தொடங்கியது. தான் சின்னப்பையனாக
இருந்த போதிலும் ஆடுமாடு கொல்லைக்காடு, கிணறுவெட்டபோகுதல், விவசாயக்கூலிவேலைக்கு
சென்று குடும்பத்தைக் காப்பாற்றத்தொடங்கினான். கூடவே அவ்வப்போது தங்களிடமிருந்த கணிசமான
நிலத்தில் குடும்பத்தோடு விவசாய வேளையில் ஈடுபட்டு வந்தார்கள்.
கூலிவேலையில்
கிடைத்த வருமானம் போக, தங்களது நிலத்தில் கிடைக்கும் கூடுதல் தானியங்களை தங்களது
தோட்டத்தில் போருகட்டி பாதுகாப்பாக வைத்து கொள்கின்றனர் . பணம் காசெல்லாம் உணவு தானியங்களின் பண்டமாற்று முறைகளிலேயே
நடந்தேறி வந்தன.
ஆனால் எவர் கையிலும் காலணாவுக்கு,அரையணாவுக்கு
வழி ஏதும் இல்லை .ஏதாவது அவசரத்தேவைக்கு ஏதாவது பணம் தேவைப்பட்டால் ஊரில் உள்ள
மூலைவீட்டு பணக்காரர்கிட்ட ரேகை ஒட்டி வாங்கிக்கொள்வார்கள்.அவர் ஒன்றுக்கு
மூணுவட்டி போட்டு ,மேலும் கூட்டுவட்டி சேர்த்து
இவர்களிடமுள்ள கால்காணி, கால்அரைக்கால்காணியை கோர்ட்டில் பாண்டை போட்டு டிகிரியாக்கி சொத்தை தனதாக்கிக்கொள்வார்கள்.இவர்களால் ஏதும்
செய்யமுடியாமல் தனது நிலபுலன்களிளிருந்து சட்டரீதியாக வெளியேற்றப்படுவார்கள்.
இதுதான்
அன்றைய ஊரின் நிலைமை,கர்ணம் ,முனிசீப்
வேலைப்பார்த்தவர்கள் எல்லாம் ஊருபட்ட சொத்து சம்பாதிச்ச கதை எல்லாம்
இப்படித்தான்.கிஸ்தி கட்டமுடியாமல் மனியாரிடமே கொல்லைக்குடிகளை விட்டுவிட்டு வந்தவர்கள் நிறையபேர்கள்
இருக்கிறார்கள்.பெருமாள் கொஞ்சம் விபரமானவர் இற்கும் ஒன்றிரண்டு காணி கொல்லைகளை
கடன் கன்னி ஏதும் வாங்காமல் ஊரு பணக்கார முதலைகளிடமிருந்து பாதுகாத்து
வைத்திருந்தார்.அண்டைக்கொல்லை பணக்கார்கள் தங்கள் கொல்லையோடு பெருமாள் கொல்லையை
சேர்த்துக்கொள்ள பலமுறை வலியவந்து கடன் கொடுக்க முனைந்த போதும் பெருமாள் மிகவும்
சாதுர்யமாக தவிர்த்து வந்து இந்த கொஞ்ச நிலத்தையும் பத்திரமாக
வைத்திருக்கிறார்.
அதை எப்படியும் சுப்பிரமணி வைத்து காப்பாற்றவேண்டும் என்ற கவலை
பெருமாளிடத்தில் நிறைய இருந்தது.அதற்காத்தான் தனது மகன் மீது எண்ணில்லா
அன்பைக்கொண்டிருந்தார்.ஆனாலும் பெருமாளால் ஒரு தந்தை என்ற ஸ்தானத்தில் அவ்வளவுதான்
நினைக்க முடியும்,ஆனால் சுப்பிரமணியின் வாழ்க்கையை மொத்தமாக உருவாக்கும் ஏகபோக
சிற்பியாக அலமேலுதான்.அவளின் கனவு ,அவளின்
உயிர், இந்த உலகத்தில் அவளின் மொத்த
செல்வமும் அவள் மகன் சுப்பிரமணியன்தான், கணவனிடத்தில் அவள் காட்டும்
பெயரளவிற்கான கரிசனத்தை விட, மகன்மீது
காட்டும்
அன்பு என்பது மிகவும் வசீகரமானது.அது
எல்லையில்லாதது.ஒரு அருவியைப்போல எப்போதும் உள்ளத்துக்குள் உற்சாகம் தரும்
மருந்தாக இருந்துகொண்டே இருக்கும்.உயிரின இயற்கை வாழ்வில் அம்மா ஓர்
அதிசயப்பிறவி,அவள் இருக்கும் போதும் தனது பிள்ளைகளுக்காக
உழைக்கின்றாள்.இறந்தபின்னும் தூங்காமல் தனது பிள்ளைகளுக்காக கனவுக்காண்கிறாள்
அம்மாவின் கனவிற்கு ஆயுள் கிடையாது.
அது எப்போதும் ஒரு சங்கிலி தொடரைப்போல ஒன்றன்பின் ஒன்றாய் தலைமுறை இடைவெளியைக்கடந்து தொடர்ந்து பற்றி நிற்கிறது.ஒரு கூட்டுக்குள்
ஆரத்தழுவி வளரும் உயிரனைய நேசம்அது. அலமேலு ஒரு பாசம் சொரியும் ஈரப்பறவை.
அதனால்தான் தனது மகனின் கல்யாண
வாழ்க்கையினை நெஞ்சில் மிகப்பெரிய கனவோடு
எதிர்பார்த்துக்கிடந்தாள்.
அவள் நினைத்ததுபோல
தனது மகனை தன்னிடம் இருந்து பிரிக்காமல்,ஆனால் தன்மீதும்,தன குடும்பத்தின்
மீதும் பாசம் சொரியும்,அதே நேரத்தில் தனது சொத்தினை காபந்து செய்யும் ஒரு பெரிய
பொறுப்பினை கொக்கு தலையில் பனங்காயை வைத்ததை போல காவேரியின் தலையில் அந்த பொறுப்பை
வைப்பதற்கு கல்யாணம் ஆனதிலிருந்து அலமேலு மறைமுகமாக தனது மருமகளுக்கு பரீட்சை
வைத்தாள்.
ஆனால் தெரிந்தோ தெரியாமலோ மாமியார்
வைத்த பரீட்ச்சையில் மருமகள் பாஸ்
பண்ணிக்கொண்டிருந்தாள்.அலமேலு வைக்கும் ஒவ்வொரு தேர்விலும் அவள் வெற்றிபெற,
வெற்றிபெற அலமேலுவின் உள்ளத்தில் தனது மருமகள் குறித்து புது உத்வேகமும்,நம்பிக்கையும் பிறக்கத்தொடங்கின.
காலப்போக்கில் அவளுக்கும் தனக்கும் இடையில் இடைவெளி குறைந்து வருவதை அலமேலு
உணரத்தொடங்கினாள்.
கல்யாணம் ஆகி ஒரு சில நாட்கள் கடந்தபின்னர் சுப்பிரமணியன் கூலிவேலைக்குப்போகத்தொடங்கினான்.
அந்த நேரங்களில் கேங்க வீட்டில் வேலைசெய்த நேரங்கள்போக ஒரு சில நேரம் மதிய
வேளையில் செத்த நேரம் தூங்கும் பழக்கம்
அவளிடமிருந்தது.இதை நுட்பமாக கவனித்து வந்த அலமேலு இதை கண்டிக்க அவளுக்கு
மனமில்லை.
ஆனால் உள்ளபடியே அவளுடைய மனதில்
வேறுவிதமாக ரேகை ஓடத்தொடங்கியது..என்னதான்
அவளுக்கு திருமணம் ஆனாலும் உடலாலும்,உள்ளத்தாலும் இன்னும் அவள் ஒரு குழந்தை
என்பதும்,இன்னும் அவள் பருவம் எய்தாத ஒரு சிறிய பெண் என்பதை மிக தெளிவாக
உணர்ந்திருந்தாள் அலமேலு.
தொடரும் ....
No comments:
Post a Comment