Tuesday, 5 February 2019

காவேரி வந்தாள் (5)

Image result for traditional tamil village women working in agriculture field in modern painting
Add caption

அதுபோலத்தான் தன்மகன் சுப்பிரமணியனை திண்ணை பள்ளிக்கூடத்தில் நொண்டி வாத்தியாரிடம் சேர்க்கவேண்டும் என்ற முடிவும். 


வரும் வெள்ளிக்கிழமையன்று நல்ல நாளு,பள்ளிக்கொடம் வைக்கிறத்துக்கு ஏத்த நாளு’ என மனதுக்குள் முடிவு செய்து, நெல்லு ,எலுமிச்சை முட்டாய், வாத்தியாருக்கு வெத்தலை பாக்கு எல்லாம் வாங்கிகொண்டு  அவள் எதிர் பார்த்த வெள்ளிக்கிழமையன்று  நொண்டி வாத்தியாரிடம் மகனை அழைத்துக்கொண்டு போனாள் அலமேலு. 

  தெருவிலுள்ள திண்ணை பள்ளிக்கூடத்தை அடைந்தவுடன் இவர்களை கண்டவுடன் “எல்லோரும் வாங்க” என வரவேற்றார் வாத்தியார்.அங்கு திண்ணையில் ஏழெட்டு மாணவர்கள் உட்கார்ந்திருந்தனர். 

   சுப்பிரமணியன் இடுப்பை சுற்றிலும்  சிறிய துண்டை கட்டியிருந்தான் இடுப்புக்குமேலே மேல் சட்டை இல்லை.அப்போதெல்லாம் மேல் சட்டைபோட்டுக்கொள்ளும் பழக்கம் மிக குறைவுதான்.யாராவது ஒரு சிலர்தான் ஊரில்   மேல் சட்டை போடும் வழக்கத்தில் இருந்தனர். மற்றவர்களெல்லாம் மேல் சட்டை அணியும் பழக்கமில்லை 

   அதுபோலத்தான் சுப்பிரமனியனும் மேல்சட்டையில்லாமல் சும்மா  வெற்றுடம்புடனே    இருந்தான். அலமேலுவை வரவேற்ற நொண்டிவாத்தியார் திண்ணையின் ஓரத்தில் நிற்க சொல்லிவிட்டு சுப்பிரமணியனை திண்ணையில் மற்ற மாணவர்களுடன் அமரவைத்தார்.சுப்பிரமணியன்  உள்ளுக்குள் பயத்தில் நடுங்கிக்கொண்டிருந்தான்.


  அங்கு உட்கார்ந்திருந்த மற்ற மாணவர்கள் இவனை ஒரு மாதிரியாக பார்த்தார்கள்."ஆட்டு வெட்டுகிடாயை மந்தரித்து விட்டது"

போல முழித்துக்கொண்டிருந்தான் சுப்பிரமணியன். 


  அலமேலு புட்டியில் கொண்டுவந்திருந்த நெல்லை வாத்தியாரிடம் கொடுத்தாள். அதை அவர் அமர்வதற்கு அருகில்  திண்ணையில் கொட்டி ,அதை கொஞ்சம் பரப்பி ,டேய் சுப்பிரமணியா ,இங்க வாடா ? என அருகில் அவனை அழைத்து  அமர வைத்து, அவன் சுட்டுவிரலை பிடித்துக்கொண்டு அ’ னா,ஆ,வன்னா, என சொல்லிக்கொண்டு சுப்பிரமணினையும் சொல்ல சொன்னார்.

  சுப்பிரமனியனும் வாத்தியார் சொல்லியவாறு பின்னால் சொன்னான்.எல்லா மாணவர்களும் கோரசாக சொன்னார்கள். பின்னர் இந்நிகழ்வைத்தொடர்ந்து மாணவர்கள்அனைவருக்கும் மிட்டாய் வழங்கினார்  நொண்டி வாத்தியார்.வெற்றிலைப்பாக்கு காதுகுத்தி புகையிலையை அவர் தமக்கென்று வைத்துக்கொண்டார்.அதன் பின்னர் மகனை பள்ளியில் விட்டுவிட்டு அவள் மட்டும் அங்கிருந்து திரும்பி பார்த்தவாறு வேகமாக வீடு வந்து சேர்ந்தாள்.

 அவள் வந்த சிரித்து நேரத்தில் சுப்பிரமனியனும் அவளைத்தொடர்ந்து வீட்டுக்கு வந்துவிட்டான்,காரணம் வேறு விதமாக இருந்தது .அலமேலு கிளம்பியவுடன் சுப்பிரமணியன் திண்ணை பள்ளியில் அழத்தொடன்கிவிட்டான். அவன் விடாமல் அழுகை தொடரவே, இது என்னடா வம்பா போச்சு “என ஆசிரியர் நீ போயிட்டு நாளைக்குய் வா !" என சுப்பிரமணியனை அனுப்பிவைத்தார்.



  அவனும் விட்டால் போதுமென’ திடு திடுவென ஓட்டம் பிடிக்கத்தொடங்கி விட்டான்.சுப்பிரமணியனின் வருகை என்பது நலிந்த தமக்கு ஏதாவது பொருளாதார ரீதியாக பயன் படும் என நம்பினார் நோனி வாத்தியார் .ஆனால் ஓடியவன் ஒடியவன்தான் ,அதன்பின்பு சுப்பு பள்ளிக்கூடம் பக்கம் தலைவைத்துக்கூட படுக்கவில்லை.

  அலமேலுவும் சுப்பிரமணியனை மீண்டும் பள்ளிக்கூடத்தில் சேர்க்க படாதபாடு பட்டாள்.ஆனால் அவன் கண்டிப்பாக பள்ளிக்கூடம் போகமாட்டேன் என உறுதியாக நின்றான்.ஆசிரியரும் இரண்டொரு நாள் சுப்பிரமணியனை நேரில் பள்ளிக்கு வாடா என்றழைத்ததும் அவன் பிடிவாதமாக வரமாட்டேன் போ! என்று  உறுதியாக சொல்லிவிட்டான்.

  அதை தொடர்ந்து வாத்தியாரும் அவனைத்தேடி அவன் வீட்டுக்கு செல்வதில்லை.அலமேலு பசப்பலுக்கேல்லாம்  அவன் அசைந்து கொடுக்கவேல்லை.சுப்பிரமணியனின் பள்ளிக்கூடம் அத்தியாயம்  அத்துடன்  முற்றாக முடிவடைந்தன. 



தொடரும்.... 






No comments:

Post a Comment