Saturday, 9 February 2019

காவேரி வந்தாள் (8)

Related image



ஒத்தாசைக்கு பூரணத்தை அழைத்து  சடங்கை எப்படி ஆரம்பிப்பது என ஆலோசனை செய்யத்தொடங்கினாள். பூரணத்திற்கு எல்லாமும் தெரியும் இந்த பட்டித்தெருவில் யார் வீட்டில் நல்ல காரியம், கெட்ட காரியம் எது என்றாலும் பூரணத்தைதான் கூப்[பிடுவார்கள்.அந்த அளவுக்கு பூரணம் அனுபவம் வாய்ந்தவள். அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் தாமாகவே வலியச்சென்று மாங்கு மாங்கென்று வேலை செய்யத்தொடங்குவாள்.

மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதைப்பற்றியெல்லாம்கவலைப்படமாட்டாள்.மிகவும் வெளிப்படையான குணம் கொண்டவள். பெருமாளுக்கு உடன் பங்காளி,ஒரே கொத்து எதையும் ஒருவரை விட்டு ஒருவர்ஒருகாரியமும் செய்ய முடியாத அளவுக்கு சொந்தக்காரர்கள். அதனால்தான் அலமேலு வீட்டு காரியத்தில் மிகவும் சந்தோஷத்தோடு ஓடியாடிக்கொண்டிருக்கிறாள்.


அதற்குள் வெற்றிலை பாக்கு வாங்க  சென்ற பெருமாள் ‘வேக்கு வேக்கு’ன்னு வந்துவிட்டார்.அதற்குள் வாசலில் பாயை விரித்து போட்டிருந்தனர்.அதில் பங்காளி ,பாகஸ்தர்கள் எல்லோரும் அமர்ந்திருந்தனர்.பெருமாள் அவர்களிடம் வெற்றிலைப்பாக்கை கொடுத்தார்.
அதை வாங்கிய முக்கியஸ்தர்கள் தாம்பாலத்தில் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக  வெற்றிலை,பாக்கு ,மிட்டாய்,ஒரு வாழைப்பழம் என ஆளாளுக்கு பிரித்து வைத்துக்கொண்டிருந்தனர். மறுபுறம் வீட்டின் தோட்டத்தில் கெங்கைக்கு தலையில் மஞ்சள்நீர்விடும்  சடங்கு தொடங்கின.
அலமேலு தனது கையால் ஒரு சொம்பு தண்ணீரை மொண்டு மேற்கு திசையை பார்த்து தனது குல தெய்வத்தை  வேண்டி தனது குடும்பம் விருத்தியாகவேண்டும் என நினைத்து  காவேரியின்  தலையில் தண்ணீரை ஊற்றினாள்.  கெங்கை உடல் சில்லிட உடல் சிலிர்த்தாள். .

      அடுத்து காவேரியின்  அம்மா தனது பங்கிற்கு  ஒரு சொம்பு மஞ்சள் தண்ணீரை மொண்டு தனது குல தெய்வத்தை வேண்டிக்கொண்டு தனது மகளின் தலையில் மஞ்சள் நீரை  ஊற்றினாள்.அதை தொடர்ந்து ஆளாளுக்கு ஒரு சொம்பு தண்ணீரை காவெரியின்  தலையில் இட்டு, இது வரை பாவாடை தாவணி அணிந்துவந்தவளின் இடுப்பினில் பெரிய எட்டு   முழுசேலையை  கட்டத்தொடங்கினார்கள்.  

இது வரை சின்னக்கிகுழந்தையாக வலம் வந்தவள் பெரிய சேலையைச்சுற்றிக்கொண்டு,ஒரே நாளில் பெரிய பொம்பளையாகிவிட்டாள் காவேரி  என சுற்றிஇருந்தவர்கள் சொல்ல எல்லோரும் "கொல்லென்று சிரித்தார்கள்".வெட்கத்தில் சிவந்தாள் காவேரி  ! வாசலில் விரித்துபோட்ட பாயினில் அமரவைக்கப்பட்ட காவேரிக்கு  சடங்கு சுற்றும் வேலை ஆரம்பாமாயின.
ஒருவர் பின் ஒருவராக ஆண்கள் மாமன், மச்சான்முறை,சித்தப்பா முறை என அனைவரும் தங்கள் பங்கிற்கு சந்தனத்தையும் .திருநீற்றையும்  நெற்றியில் இட்டு வாழ்த்திச்சென்றனர். 

சிலர்  காவேரியின்  கன்னத்தில் செல்லமாக சந்தனத்தை தடவிச்சென்றனர். சடங்கு சுற்றும்படலம் வெகு சிறப்பாக நடந்து முடிந்தன. வீட்டிற்கு வந்த உறவினர்கள்  அனைவரும் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
   ஒரு பெரிய பிரச்சினையை மிக சந்தோஷமாக நடத்திவிட்ட மகிழ்ச்சியில் இருந்தாள் அலமேலு. பெருமாளும் தான பங்கிற்கு வாசலில் போட்டிருந்த பாயையும்,பூ பழத்தட்டையும் எடுத்துக்கொண்டு வீட்டினுள்ளே இருக்கும் சாமிபடத்திற்கு முன்னால் கொண்டு வைத்தார்.  அலமேலு தன் மகனை அழைத்து போருபட்டியிலிருந்து மாட்டுக்கு  தீனி பிடுங்கி போட சொல்லிவிட்டு,தன் மருமகளை அருகே அழைத்து சில அறிவுரைகள் சொல்லி வீட்டினுள்ளே அனுப்பிவிட்டு,தனது கணவர் பெருமாளை அலமேலு அழைத்தாள்.

என்றுமில்லாமல்  இன்று  சந்தோஷமாக அழைப்பதை எண்ணி சந்தொஷமடைந்தவராக விரைவாக அலமேலுவை நோக்கி சென்றவர். என்ன அலமேலு ? எனகேட்டார். தனது கணவர் அழைப்பதைக்கூட உள்வாங்கும் சிந்தனையில்லாமல் எதையோ நினைத்துக்கொண்டிருந்தவள், 

  திடீரென நினைவுக்கு திரும்பியவள் ,”ஒண்ணுமில்லே” மருமகளை அவங்க வீட்டுக்கு ரெண்டு நாளைக்கு அனுப்பி வைப்போமா ? நாளைக்கு  ஏதாவது பேச்சு கடன் வந்த என்ன செய்வது ? தீட்டு கழிஞ்சு போச்சு. தண்ணீர் விட்டாச்சு! புண்ணியானம் பண்ணியாச்சு . இங்கு பூட்டி போட்டமாதிரி
“அதுவும் சின்னஞ்சிறுசுக எத்தனை நாளைக்கு  இங்கேயே கிடக்கும்?” வரும் பொதன்  கிழமை அன்னைக்கு அவங்க ஊட்டுகாரங்களை வரவழைச்சு அனுப்பிவைப்போம்.நீயும் கூட கொடுக்கூர் வரைபோய் உட்டுட்டு வா” என அலமேலு சொல்லிமுடித்தாள். பெருமாள் “பூம் பூம்” மாடு மாதிரி தலையாட்டிவிட்டு .சரி பார்ப்போம்!“ என பதிலளித்துவிட்டு அங்கிருந்து போய் மாட்டை பிடித்துக்கொண்டு கொல்லைக்கு கிளம்பின்னார். 

வானம் ஒரு மாதிரியாக கருமேகம் சூழ்ந்தது போல கருக்கிக்கொண்டு வந்ததால் வாசலில் காயப்போட்டிருந்த தானியத்தை அள்ள வேண்டி அவசர அவசரமாக  அங்கிருந்து  புறப்பட்டுப்போனாள் அலமேலு. 
தொடரும் ....     

No comments:

Post a Comment