Monday, 24 December 2018

காரையாகுளம்




காரையாகுளத்தின்
நடுவில் இருக்கிறது
குடிநீர் கிணறு.
கிணற்றை அடைய
நீண்ட அணயின் மீது வழிபாட்டை ...


கரை மீது  பெரிய
அரசமரம்.
வளைந்து நெளிந்து
தண்ணீர் வரை தாழ்ந்து கிடக்கும்
அதன் மீதேறி
குளத்தில் குதிப்பதென்றால்
எல்லோருக்கும்
கொண்டாட்டம்..!


ஏரியின் முகப்பில்
வரலாற்று பெருமைகளை
தன்னகத்தே கொண்டு
நூற்றாண்டுகளை கடந்து நிற்கும்
மாரியம்மன் கோவில்.


அந்த ஊருக்குள்ளே
நான் சின்னப்பயலாக
முதன்  முதலாக
நுழைந்தபோது
என்-
கண்ணில் விழுந்த
இந்த கோயிலின்  பிம்பம்,
இன்னும்
என் கண்ணுக்குள்ளே
அப்படியேதான்   கிடக்கின்றன !


ஓடாமலேயே
நூறு ஆண்டாய்
ஒரே இடத்தில்
அமைதியாய் உட்கார்ந்திருக்கும்
அழகிய தேர்..!
என்றாவது
ஒரு நாள்
இந்த தேர்  ஓடும்
என  நினைத்திருந்தோம் ..!
தேர் ஓடவேயில்லை.
மணிவண்ணனும்
நானும் ...
அடிக்கடி
தேரினுள்
ஒளிந்திருக்கும் காட்டுப்பூனையை
துரத்துவதுண்டு,
அதன்
அழகிய கலை நுட்பங்களை
சமூக விரோத கும்பல்
ஒவ்வொன்றாக திருடி ...
உருகுலைந்து
ஒரு நாள்
தேரே காணமல் போனது !
கைகுழந்தை ஒன்று
காணாமல் போனது போல...


காரையாகுளம்
நிறைய காதல்  கவிதைகளை
எழுதியிருக்கின்றன !
அவற்றில்
சில  அரங்கேறின.
மீதமுள்ளவை
இன்னும்
காலத்தால்
அப்படியே இருக்கின்றன..!
வயது போனபின்பும்
கல்யாணம் ஆகாமல்
காத்துக்கிடக்கும்
கண்ணிபெண்ணை போல ...


காரையாகுளம்
என்
பல்கலைக்கழகம் ! 

No comments:

Post a Comment