குள்ள வத்தியாரிடம்
நான்
உதவியாளராக இருந்ததுண்டு..!
குள்ள வாத்தியார்
ஒன்றும்
அதிகம் படித்தவரில்லை !
அவரும்
இரண்டாவது வரை மட்டுமே
படித்ததாக
ஒரு தடவை
யாரோ
என்னிடம் சொன்னதாக
ஞாபகம் இருக்கிறது !
அந்த காலத்தில்
இலைக்கடம்பூரில்
பள்ளிக்கூடம் இல்லை !
தாழ்த்தப்பட்டோர்
பகுதியில்
ஐந்தாம் வகுப்புவரை
ஒரு பள்ளிகூடம் இருந்தது !
ஆனால் -
அங்கு
குடி தெருவிலிருந்து
யாரும் படிக்க சென்றதில்லை!
எல்லோரும்
இரண்டு கிலோ மீட்டர்
தள்ளியுள்ள
நிண்ணியூருக்கு
ரயில் பாதையில் நடந்து சென்றனர் !
குள்ளவாத்தியார்
வாணச்சி ஆயா திண்ணையில்
திண்ணைப்பளளிக்கூடம்
நடத்திக்கொண்டிருந்தார்!
மாமன் வீட்டு கட்ட பய
அவர் பள்ளிக்கூடத்தில்தான்
படித்துக்கொண்டிருந்தான்.
அவனை
அவ்வபோது பார்க்கப்போவதுண்டு
என்னை
ஒரு கணம் உற்றுப்பார்ப்பார்!
பின்னர்-
போடா கட்டையா என்பார்!
வீட்டுக்கு வீடு
கொஞ்ச காலம் தங்கி வந்தார்!
வீட்டுக்காரர்கள்
வெறுக்க தொடங்கினால்
சொல்லாமல் கொள்ளாமல்
அங்கிருந்து
வெளியேறிவிடுவார்
பின்னர்
ஆயிவீட்டு திண்ணையில்
கொஞ்சகாலம்
குடியிருந்தார்.
காலையில்
ஆலமரத்தில்
இலைபறிக்க செல்வார்.
அந்த இலையை
வெயிலில் காயவைத்து
பின்னர்
அதன்மீது தண்ணீர் தெளித்து
வரிசையாக அடுக்கி
பாடம் செய்து
அதன் மீது
கல்லை தூக்கிவைத்து,
இரண்டு நாட்கள் கழித்து
அதை
ஒன்றன்பின்
ஒன்றாக
அடுக்கி
வட்ட வடிவில் பெரிய இலையாக
தைத்து,
வரிசையாக
ஐம்பது
நூறு - என
கட்டுகளாக கட்டி தலையில் சுமந்து
செந்துறைக்கு சென்று
கடை கடையாக விற்ப்பார்.
அரிசி-
குழம்புக்கு சாமான் வாங்குவார்!
அவருடைய குழம்பு
மிகவும் மிகவும் நன்றாயிருந்தது !
நேரம் கிடைக்கும் போது
முயல் பிடிக்கபோவார்!
அதை
விற்று
செந்துறை சந்தைக்கு சென்று
பன்றி கறி வாங்கி வந்து
சமைத்து சாப்பிடுவார் !
அவ்வப்போது
நிறைய கதைகள் சொல்வார்.
அவரை
எனக்கு நிறைய பிடித்திருந்தது !
கட்டிய மனைவி
அதே ஊரில் இருந்தும்
அதைப்பற்றியெல்லாம்
ஒரு நாள் கூட
அவர் பேசியதில்லை !
நடை உடையாக
இருந்து வந்தவர் !
சம்பாதிக்க
திராணியில்லாததால்
தோலெல்லாம் சுருங்கி
நடக்கவே
சிரமப்பட்டார் !
மெள்ள...
மெள்ள பொலிவிழந்து வந்தார்!
உடம்பெல்லாம்
வீங்கி கொண்டே வந்தது.
எனக்கு
மனதெல்லாம் வலித்தது!
முகமெல்லாம்
சுரந்து காணப்பட்டார்.
சோற்று குடியில்லாமல்
படுத்த படுக்கையாய் கிடந்தார்.
ஆயிகூட
என்ன வாத்தியாரே சாப்பிட்டியா?
என-
அடிக்கடி கேட்பார்!
"இம் என்பார்
ஆனால்
கடைசியில்
குள்ளவத்தியார் என்னவானார்?
எப்படி செத்தார்?
என்பது
எனது பதிவுகளில்
எதுவும் இல்லாமல் போயிற்று !
என்னினும்
குள்ளவத்தியார்
எனக்குள்
அடிக்கடி வந்து போய்கொண்டுதான் இருக்கிறார்!
No comments:
Post a Comment