எனக்கு
கிடைத்தவற்றை சாப்பிட்டு ...
எவருடனும் நட்பு வைத்து...
பள்ளிக்கூடத்தை புறக்கணித்து...
எல்லா பாடங்களிலும் தோல்வியுற்று...
விரும்பிய இடங்களில் சுற்றி திரிந்து...
சொந்த பந்தங்களால்
நிராகரிக்கப்பட்டு...
நிர்க்கதியாய்
நடுத்தெருவில் கையை பிசைந்து கொண்டு நின்று...
அவமானப்பட்ட
பிழைப்பு
பிழைத்து...
ஆராலையும் நேசிக்கபடாதவன்!
இந்த
உலகில்
வாழவே இடம் கிடைக்காமல்
ஊர் ஊராய் அலைந்தவன்!
என்றைக்கும்
நம்ம கதை
தேராத கதைதான்
என்ற நினைவுகளோடு
கரை சேராமல்
கவிழப்போகும் ஓடம்
இது -
என்னும்
கடுமையான
தழும்புகளை சுமந்து நான்...
என்னை சார்ந்த
வாழ்க்கை சூழலில்
என்னை நானே மூழ்கடித்து...
எதார்த்தம்
தொலைந்த
பொட்டல் தெருவில்
எனக்கு நானே
புது புது வேடமணிந்து...
வித விதமாக
பெயர் சூட்டிக்கொண்டு...
வித விதமாக நடித்து
கண்ணாடியில்
முகம் புதைத்து
எனக்குள் நானே
என்னை கிண்டல் செய்து...
எனக்குள் நானே
என்னை அவமான படுத்தி...
எனக்குள் நானே
தகுதி படுத்தி...
அவ்வபோது
தகுதியிறக்கம் செய்து...
அவ்வபோது
தூர விலகி நின்று
உரக்க குரலெடுத்து ...
யார் யார் பேரையோ
கூவியழைத்து...
யார் யாரோலோ
உதாசீனப்படுத்தபட்ட
சினேகதமற்ற
மனித உறவுகளில்
மாட்டி கொண்டு
போய் சேர வேண்டிய தூரத்தை
சேரமுடியாமல்
இன்றும் -
முடிவற்ற தேடல்களோடுதான்
திசைகளற்ற யுகத்தில்
நின்று கொண்டிருக்கிறேன்..!
வயிறு எரியும்போது
சோறிட்ட கைகள் !
சினேகித்த நட்பு !
மீண்டும் மீண்டும்
பார்க்க துண்டும்
பழகிய பழைய இடங்கள்..!
பிரிந்து போனாலும்
சாகும் வரை
நினைத்து
அழத்தூண்டும்
உண்மை காதல்,
உயிரே போனாலும்
நன்றி மறவாத
உள்ளத்துடன்
உயிர்த்திருக்கும் ஜீவன்
என -
பண்புகளின் சுமைகளோடு
என்னை
வடிமைத்த
இலைக்கடம்பூரை
நான்
நினைக்காத
நாளில்லை!
No comments:
Post a Comment