அவர் நடந்து போகும் பாணி
வித்தியாசமானது
அது
மற்றவர்களுக்கு
கேலியாக தெரியும்.
ஆனால் -
அவர் இந்த தேசத்தின்
ஏழ்மையின் வடிவம்.
அவர்
கடந்த காலங்களில்
ஆயி குடும்பத்தோடு மிகவும்
பரிச்சயம் ஆனவர்.
நொச்சிக்குளத்து சின்னாயியும்
ஆயியும் களைஎடுக்கப்போவார்கள்.
கொளஞ்சியும்,
நானும்
முனியப்பாகுளத்தில்
தூண்டில் போட்டு
எங்கள் வாழ்க்கையை
தேடி
கண்டுபிடித்துகொண்டிருந்தோம்..!
தூண்டிலை நேசித்த அளவுக்கு
படிப்பை நேசிக்கவில்லை.
என்னவோ தெரியவில்லை
இலைக்கடம்பூர்
என் அழகியல் உணர்விலும்
ரசனை தன்மையிலும்
மிகப்பெரிய மாற்றத்தை
கொண்டுவந்தது!
அடை மழை காலம் வந்தால்
போதும்
காலையிலேயே
ஓடைக்கு ஓடுவோம்..!
வடிந்தும்
வடியாமலும்,
ஓடிகொண்டிருக்கும்
வெள்ளத்தை வைத்து
பிரமாண்டாமாக
கற்பனை செய்வோம்.
ஓடை வெள்ளம் ஊருக்குள் புகுந்தால்
எல்லோரும்
என்னாவார்கள்?
என்று -
ஒவ்வொருவராக
கற்பனையாக சொல்வார்கள் !
உலகம் அழிந்தால்
எப்படித்தப்பிப்பது
என்பது குறித்த்தெல்லாம்
ஆராச்சி செய்வோம்!
சுரை குடுக்கையில்
புகுந்து கொண்டால்
உலக அழிவதிலிருந்து
தப்பித்துகொள்ளலாம்
என்பதை
அப்போதுதான்
கண்டுபிடித்தோம்..!
கேட் கடை சம்பதிடம்
காசு இருந்தாலும்
இல்லாவிட்டாலும்
கடன் வைத்து
இட்லி தின்று
பீடி வாங்கி குடித்து...
புகைவண்டி சாலையை ஒட்டிய
ஆலமரங்களில்
ஏறி விளையாடுவோம்!
பொழுதெல்லாம்
ஆடு மேய்ப்போம் !
ஆனைவாரி ஓடைகளில்
மேய்ச்சல் அதிகம் என்பதால்
ஆடுகளின் மாநாட்டினை
அங்கே நடத்துவோம் !
ஆயிரம் ஆண்டுகள் பழமைவாய்ந்த
சூரியனார் கோவில்.
இச்சிலை மரத்தடியில்
தெரணி செடிகளிக்கிடையில்
சூரியனார் கடவுள்
பூஜையில்லாமலேயே
இனிதே
வீற்றிருக்கிறார்..!
கூடவே
இச்சிலைமரம்
குயில்களுக்கு
கூடாரமாகி போனது!
சுருக்கு வைத்து
குயில் பிடிப்போம்!
பஞ்சருக்கு
சாராயம் வாங்க
பெரியாகுறிச்சி
கீழக்குறிச்சிக்கு போவோம்..
வாங்கிய சாராயத்தில்
கொஞ்சம் குடித்துவிட்டு
கொஞ்சம் தண்ணீரை நிரப்பிகொண்டு,
நானும்
பெரிய பயலும்
ஓட்டை சைக்கிளில்
ஊர் வருவோம்!
வித விதமாய்
நாடகம் எழுதி
திருச்சி வானொலிக்கு
அனுப்புவோம்!
நாடகம் ஒலிப்பரப்பாகும்
என்று
நாட்கள் பல காத்திருந்தோம்!
நாடகம்
ஒலிப்பரப்பாகவில்லை.
நாங்களும் கவலைப்பட்டதில்லை!
ஓட்டை சைக்கிளை
நூறு ரூபாய்க்கு
விலைக்கு வாங்குவோம்.
பழுது பார்த்து
புது புது சாமான்கள்
வாங்கி போட்டு
அழகு பார்த்து
திரும்பவும்
நூறு ரூபாய்க்கு
விற்போம்.
அத்தனை அறிவாளிகள் நாங்கள்!
எனது உலகம்
வேறாய் இருந்தது .
அங்கு
என்னை சார்ந்தவர்களின்
சுதந்திர சிறகுகளை
கட்டிபோட
யாரிடமும்
எந்த கயிரும் இல்லை !
கட்டுப்பாடான
உலகத்தின்மீது
எனக்கு
கோபம் கோபமாய் வந்தது.
இயற்கையை
கற்றுக்கொள்ள
அப்போது
எனக்கு
எந்த
ஆசிரியனும் தேவைப்படவில்லை!
No comments:
Post a Comment