அந்த காலத்து
பாவாடை ஆயி மகன் பிச்சைபிள்ளை
ஐடிஐ வரை படித்தவர்.
அவர்
ஆங்கிலம் பேசுவதை
மிக -
வியப்போடு கேட்டிருக்கிறேன்.
பெண் வேடமிட்டு
தெரு கூத்தில்
டான்ஸ் ஆடத்தொடங்கினால்
மேடையே கலகலக்கும் !
விசில் சத்தம்
வானையே பிளக்கும்.
அவர் பேதி வந்து செத்தபோது
மிகவும்
மனம்
உடைந்து போனேன்!
No comments:
Post a Comment