Monday, 24 December 2018

தவிப்பு

காதல் என்பது
வெறும்
கனவுகளை
தின்று
கற்பனையில்
தன்னை தொலைத்துவிட்டு
தனக்குள்
தவிப்பதல்ல ...


காதல்
என்பது
இருவரது கைகுட்டைகளிலும்
தங்கள்  பெயர்களை
மாற்றி  மாற்றி
எழுதிகொள்வதல்ல...

 
காதல்
என்பது
இரு சுவர்களுக்கப்பால்
இருவரும்
குலுங்கி குலுங்கி அழுது
கண்ணீரால்
காற்றினில்
மாறி மாறி
கவிதை  எழுதுவதல்ல...

 
மாறாக
காதல் என்பது
நிஜ வாழ்க்கையின்
எதார்த்த உலகில்
தங்களை தாங்களே
புரிந்து கொள்வதாகும் !

 
காதலின்
சிறகுகளை
சுற்றிலும்
திட்டமிட்டு 
பின்னப்பட்டிருக்கும்
சின்ன சின்ன
கனவு வலைகளை
எரிப்பதாகும் !

 
சடங்குகளாலும்
சம்பிராதயங்களாலும்
காதலை
பீடித்துள்ள
சமூக குப்பைகளுக்கு தீ
வைக்கவேண்டும் !

 
பணத்தாலும்
ஏற்றத்தாழ்வான
வாழ்நிலைகளுக்கும்
மத்தியில்
கைகளை
வெறுமனே
பிசைந்து கொண்டு
கையறு நிலையில்
நின்று கொண்டு,


புதைகுழியில்
சிக்கிகொண்ட
ஒருவன்
அவ்வழியே யாராவது
உதவிக்கு
வருவார்களா
என  எதிர்ப்பார்ப்பது
போல
காத்திருப்பது
காதலின்
அழகல்ல
என்பதை
புரிந்து கொள்ளவேண்டும் !

 
காதலுக்கான
இருவரது
போராட்டத்தையும்
சமூக விடுதலையுடன்
இணைத்து  போராட வேண்டும் !

காதலின்
சுதந்திரம் என்பது
வெறும்
பூக்களை மட்டும்
பரிமாறி கொள்வதல்ல.
மாறாக
அது
தனது
நிரந்தர இருத்தலுக்கான
போராட்டத்தை
தொடர்ந்து
நடத்துவதேயாகும் ! 



Image result for a red rose in his hand   and something tears in image




No comments:

Post a Comment