Monday, 25 March 2019

அத்திப்பூக்கள்



Image result for park of poems  in modern paintings


















நிலவும்
தொடர் வெளியைக்கடந்து
சொற்களுக்குள்
அடைக்கலம் புகுகின்றன
மௌனம் !"
இலைகளில்
இளைப்பாறுகிறது
காற்று !"
 *
அரசியல்வாதியின்
கவலையெல்லாம்
ஓட்டை
பற்றியதாயிருக்கிறது !
வாக்காளனின்
கவலையெல்லாம்
நாட்டை
பற்றியதாயிருக்கிறது !"
 *
 நிலபிரபுத்துவத்தின்
நீட்சியே
வாரிசு அரசியல்! "
 *
 ஏழைகளின் தலைவன்
என்பவர்கள்
எப்போதும்
பணக்காரர்களாகவே
இருக்கிறார்கள் !"
 *
 முன்னோக்கி நடப்பதாக 
சொன்னார்கள்! 
இறுதியில்
புறப்பட்ட இடத்திற்கே 
சேதாரமின்றி
வந்துசேர்ந்தார்கள்! "
 *
 நாட்டின் தலையெழுத்தை
இறுதியாக 
மாற்றியமைக்க போகும்
நாள் என்றவர்கள் 
மாறி மாறி
வந்துபோனார்கள்! 
ஆனால் .....
கணணில் பட்ட இடமெல்லாம் 
வாய் பிளந்து
ஆங்காங்கு
கல்லறை பிணங்களாய் கிடக்கிறது
நாட்டின் தலையெழுத்து! "
 *
தேர்தலுக்கு முன்பு
வாக்காளன்
வள்ளலாய் இருந்தான்
வாக்கு கேட்டவன்
பிச்சைக்காரனாய் இருந்தான் !
தேர்தலுக்கு பின்பு
வாக்குகேட்டவன்
பணக்காரனாய் ஆனான் 
வாக்காளன் வழக்கம்போல
பிச்சைக்காரனாகவே
இருக்கிறான்! "
*
 நாட்டுமக்கள் எல்லாம்
ஒன்று சேர்ந்து
முழு சம்மதத்தோடு
திருடர்களின் கைகளில்
வீட்டு சாவியை
ஒப்படைக்கும் 
துன்பகரமான நாள்தான்
தேர்தல் நாள் ! "
 *
 ஊர் சனங்கள்
ஒன்றுகூடி 
தமக்குதாமே
சூன்யம் வைத்துக்கொள்ளும்
முறைதான்
தேர்தல்தாகும் ! "
 *
 பணநாயக அரசியலில் 
தலைவனின் பிள்ளைகளே 
அடுத்தடுத்து 
தலைமைக்கு வருகிறார்கள் !
இல்லாதவனுக்கான தகுதி
தொண்டன் 
என்பது மட்டுமே! "
 *
 எந்த பொருளாதார 
பின்புலமும் இல்லாத
கடைகோடி குப்பனும்
தேர்தலில்
பங்குகொள்ளும்
வாய்ப்பை 
வழங்கினால் மட்டுமே 
அது மக்கள் நாயகம்! "
 *
 இழவு வீட்டில்கூட
கிடைப்பதை
சுருட்டுபவன்தான்
அரசியல்வாதி!
 *
 என் இறகுகளை
இசைவோடு 
தழுவிக்கொள்ளும் 
ஆகாயத்தைத்தேடி
எல்லை விரிகிறது
என் தாகம் !"
 *
மருதாணி பூசிய 
விரல்களின் 
நகங்களில் 
மையல் கொள்கிறது 
நள்ளிரவின்
பிற்பகல் 
ஒன்று !"
 *
தொடுகையின்
தீண்டலுக்கு 
வசப்படும் 
வானம் அருகில்,
தூரத்தில் நின்று
கண்ணசைக்கிறது
வசப்படாத 
நெருக்கம் 
ஒன்று !"
 *
 விழித்திருக்கிறது
என்னோடு
கண்மூடா
இரவொன்று! "
 *
 வாய்மொழியின்
வார்த்தைகள்
உயிரின் புறத்தே
எதுவும் பேசாமல்
வெறுமனே
விடைபெற்று போகின்றன!
தோன்றும் இயற்கையின்
அகத்தே தோன்றும் நிகழ்வுகள் 
காட்சியின் வெளியே
காலத்தைக்கடந்து
உயிரோடு உரையாடிகளிக்கின்றன! "










  

No comments:

Post a Comment