Thursday, 17 January 2019

நனவின் வெளி



காற்றின் புரவியில் இனிதே
கடுந்தூரம் பயணிக்கும் ! நெஞ்சம்
நாற்றின் வழியே கடந்து 
நாணல் வெளியை அடையும்!
ஊற்றின் வேர்களை தேடி
ஊழிபல தாங்கி செல்லும்
கூற்றின் முகமே ஞான
காரணத்தின் தோற்றுவாய்!

பகல் இரவாய் தோன்றும்
பன்மய கருவின் வெளியில்,
அகம் புறமாய் மாறும்
ஆற்றும் துயர் கடலில்,
சுகம்ஏது மற்ற கடும்
சுடு மணலில் நடக்கிறது !
சூட்சுமத்தின் வேர்களைத் தேடி
சுயத்தின் நிழல் கடக்கிறது!


விழியில் தூக்கம் வழியும்
விடியல் திரைகள் நழுவும்!
பொழியும் கதிரின் ஒளியில்
பதுங்கிக் கொள்ளும் இருண்மை!
கழியும் கால வெளியில்
கரையும் இளமை வயல்கள்!
கழிந்துபோன கணக்கு! மீண்டும்
காலம் எழுதும் வழக்கு!


விரல் தீண்டலின் வெம்மையில்
வெந்து தணிந்தது தாகம் !
குரல் வரும் திசையில்
வேர் பிடித்தது கானம் !
மறத்தலின் பின்வெளியே மெல்ல
மறைந்து போனது மோனம்!
பிறந்து தனிவழியே பயணித்து
பார்வையில் உறைந்தது ஞானம் !



Image result for silence in modern painting




No comments:

Post a Comment