மனித ஒலி அரவமற்ற
கால வெளியில்
காவல் காக்கும்
எல்லைச்சாமி !
யாசகனின்
பிச்சைப்பாத்திரத்தில்
வீழ்ந்துக்கிடக்கிறது
நள்ளிரவின்
எச்சம் !
ஒவ்வொரு முறையும்
இறுதியின் துவக்கத்தில்
இதுதான் கடைசியென
தொடங்குகிறது
துவக்கம் !
சூழலின் பரபரப்பில்
நிரம்பி வழிகிறது
கணத்தின்
வெளி !
கைகளுக்கு
எட்டும் தூரத்தில்
அந்நியயப்பட்டு
நிற்கிறது
நேசம் !

கால வெளியில்
காவல் காக்கும்
எல்லைச்சாமி !
யாசகனின்
பிச்சைப்பாத்திரத்தில்
வீழ்ந்துக்கிடக்கிறது
நள்ளிரவின்
எச்சம் !
ஒவ்வொரு முறையும்
இறுதியின் துவக்கத்தில்
இதுதான் கடைசியென
தொடங்குகிறது
துவக்கம் !
சூழலின் பரபரப்பில்
நிரம்பி வழிகிறது
கணத்தின்
வெளி !
கைகளுக்கு
எட்டும் தூரத்தில்
அந்நியயப்பட்டு
நிற்கிறது
நேசம் !
No comments:
Post a Comment