அந்த அரைகுறை வயதிலும்
அவளை
அப்படியே
விழுங்கி விட தோன்றியது !
என்னை தவிர
எந்த ஆண்கள்
அவளிடம் பேசினாலும்
எனக்கு
எல்லையற்ற பொறாமையாக இருந்தது!
ஆனால்
என்னிடம் பேச மட்டும்
ஏனோ
மறுத்து வந்தாள் !
என்னிடம்
நிறைய ஆடுகள் இருந்தது.
தினந்தோறும்
எந்த திசைக்கு சென்றால்
ஆடுகளுக்கு
நிறைய தழை கிடக்கும் என்று
அவள் நம்புகிறாளோ ...
அந்த திசையை நோக்கி
அவளை பின் தொடர்ந்து ...
கூப்பிடு தூரத்தில்
நானும் சென்று கொண்டிருந்தேன் !
என்னை தவிர
எல்லோரிடமும்
கலகலப்பாக பேசுபவள்.
என்னை
ஒரு பொருட்டாகவே
அவள் -
நினைத்ததாகவே தெரியவில்லை !
எனக்கு தெரியாமலேயே
எப்போதும்
அவளை சுற்றியே
மனது
சதா
சுற்றிக்கொண்டிருந்தது ..!
பள்ளிக்கூட எண்ணமெல்லாம்
மெல்ல மங்கி கொண்டிருந்தது !
அவளுக்காகவே
பள்ளி கூடம் பரணுக்கு போனது !
ஆடு மேய்க்கும்
தொழிலுக்கே
ஆயத்தமாகி போனேன் !
அவளின்
சாரை கண்ணின்
காந்த பார்வைக்காக
ஊறவைத்த
புளியங்கொட்டையை தின்று கொண்டு
காடு மேடெல்லாம்
சுற்றியலைந்து ...
அவள்
பார்த்தும்
பாக்காததுமாய் போனால்
அவமானத்தால் கூனி குறுகி ...
செத்து பிழைத்து...
அவள் என்னை
ஏற்காத காரணத்தால்
அவளின்
என் காதலை
நான் -
துடைத்தெரிய விரும்பவில்லை !
என்றாவது
ஒரு நாள்
என் காதலை
அவள் -
அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை !
கடைசிவரை
என்னை ஏற்காதவளை
நான்
இன்னும்
இழக்காமல் வைத்திருக்கிறேன் !
வேறு பட்ட சுழலில்
இருபது ஆண்டுகள் போய்விட்டன !
பின்னம்
ஓர்
நாள்
அவளை தற்செயலாக சந்தித்தேன் !
அடையாளம் தெரியாதவள் !
என்னை
அடையாளம் கண்டு
நலமா ? என்றாள் !
முன்னம்
ஓர் காலத்தில்
என் காதலை ஏற்று கொள்ளாததன் காரணத்தை
கூறாமலேயே
கடைசி வரை இழுத்தடித்த
அவளை பார்த்து
இப்போதும் உயிரோடுள்ள
என் காதலை
அவளிடம் கூற விரும்பவில்லை !
அவளை
அப்படியே
விழுங்கி விட தோன்றியது !
என்னை தவிர
எந்த ஆண்கள்
அவளிடம் பேசினாலும்
எனக்கு
எல்லையற்ற பொறாமையாக இருந்தது!
ஆனால்
என்னிடம் பேச மட்டும்
ஏனோ
மறுத்து வந்தாள் !
என்னிடம்
நிறைய ஆடுகள் இருந்தது.
தினந்தோறும்
எந்த திசைக்கு சென்றால்
ஆடுகளுக்கு
நிறைய தழை கிடக்கும் என்று
அவள் நம்புகிறாளோ ...
அந்த திசையை நோக்கி
அவளை பின் தொடர்ந்து ...
கூப்பிடு தூரத்தில்
நானும் சென்று கொண்டிருந்தேன் !
என்னை தவிர
எல்லோரிடமும்
கலகலப்பாக பேசுபவள்.
என்னை
ஒரு பொருட்டாகவே
அவள் -
நினைத்ததாகவே தெரியவில்லை !
எனக்கு தெரியாமலேயே
எப்போதும்
அவளை சுற்றியே
மனது
சதா
சுற்றிக்கொண்டிருந்தது ..!
பள்ளிக்கூட எண்ணமெல்லாம்
மெல்ல மங்கி கொண்டிருந்தது !
அவளுக்காகவே
பள்ளி கூடம் பரணுக்கு போனது !
ஆடு மேய்க்கும்
தொழிலுக்கே
ஆயத்தமாகி போனேன் !
அவளின்
சாரை கண்ணின்
காந்த பார்வைக்காக
ஊறவைத்த
புளியங்கொட்டையை தின்று கொண்டு
காடு மேடெல்லாம்
சுற்றியலைந்து ...
அவள்
பார்த்தும்
பாக்காததுமாய் போனால்
அவமானத்தால் கூனி குறுகி ...
செத்து பிழைத்து...
அவள் என்னை
ஏற்காத காரணத்தால்
அவளின்
என் காதலை
நான் -
துடைத்தெரிய விரும்பவில்லை !
என்றாவது
ஒரு நாள்
என் காதலை
அவள் -
அங்கீகரிக்க வேண்டிய அவசியமில்லை !
கடைசிவரை
என்னை ஏற்காதவளை
நான்
இன்னும்
இழக்காமல் வைத்திருக்கிறேன் !
வேறு பட்ட சுழலில்
இருபது ஆண்டுகள் போய்விட்டன !
பின்னம்
ஓர்
நாள்
அவளை தற்செயலாக சந்தித்தேன் !
அடையாளம் தெரியாதவள் !
என்னை
அடையாளம் கண்டு
நலமா ? என்றாள் !
முன்னம்
ஓர் காலத்தில்
என் காதலை ஏற்று கொள்ளாததன் காரணத்தை
கூறாமலேயே
கடைசி வரை இழுத்தடித்த
அவளை பார்த்து
இப்போதும் உயிரோடுள்ள
என் காதலை
அவளிடம் கூற விரும்பவில்லை !
No comments:
Post a Comment