Monday, 24 December 2018

எந்த
உவமானகளுக்கும்
வசப்படாமல்
வளைந்து  நெளிந்து
கைகளுக்கு
அகப்படாமல்
கழன்று  போகும்
விலாங்கு  மீனை போல்தான்
காதலும் ...


வெறும்
ஆயத்த சிரிப்புகளை
அணிந்து
வெறுமனே சிரித்து  வைத்து ...


மானையே  பார்க்காமல்
மானே  என்றழைத்து,


குயில் வந்து  உட்கார
மரங்களே  இல்லாத
மந்தை வெளியில்
குயிலே
என்றழைத்து,


வானம் பொய்தது போன
மானாவரி
பொட்டல்வெளியில்
நெய்வேலி  காட்டாமணுக்கு
பூக்களை   தவிர,
காட்சிக்கு கூட
பூக்களற்ற
இங்கு
உன்னை
பூவே  என்றழைத்து ...
ஆபத்துகளற்ற
பழைய  மரபுகளுக்குள்
நுழைந்து  கொண்டு
பொய்யான
பல முகங்களை சூடி  கொண்டு,


பொய் கலை கழகத்தில்
முனைவர்
பட்டம் பெற்று,


குறைந்த
கால அவகாசத்திற்குள்
முடிந்தவரை
உன்னை  விழுங்கி
தீர்த்து விட வேண்டும்



என்ற   பரபரப்பில்
ஒவ்வொரு நாளும்
உன்னிடம்
நான்
உண்மையான
ஒரு காதலன் என
சொல்லிக் கொள்கிறேன்...!

No comments:

Post a Comment