ஊரில்
ஒரு சில இடங்களில்
பன்றி வளர்க்கிறார்கள்
பிழைப்பதற்கு
வேறு வழி தெரியாமல்...
இந்த தெரு மட்டும்
சற்று
சுகாதாரமாக இருக்கிறது ..!
ஆனால்
விதிவிலக்காக
ஒருவன் மட்டும்
பன்றி வளர்க்கிறான் !
குழந்தைகள் நிறைந்த
குடியிருப்பு பகுதிதான் ...
நோய் வரும் என்ற
விழிப்புணர்ச்சி இருந்தும்
குடிசை போட்டுபோட்டு
பன்றி வளர்க்கிறார்கள் ..!
ஊராட்சி தலைவரின்
ஒத்துழைப்போடு,
இரவெல்லாம்
ஒரே சத்தம் !
பன்றிகள்
ஒன்றோடொன்று
கடித்து குதறிக்கொண்டு
பயங்கரமான
பெருத்த கூக்குரல் ...
பக்கத்திலுள்ளவர்களுக்கெல்லாம்
பெருத்த அசௌகரியம் !
அவன் ஒன்றும் பெரிய தாதா இல்லை!
அவனிடம்
இதை -
யார் கேட்பது
என்பதில்தான் பிரச்சினை.
மழைக்காலங்களில்
அவ்விடம் முழுதும்
சாக்கடையும்,
சகதியுமாய்
ஆகிவிடுகிறது!
அண்டை வீட்டிலுள்ளவர்களின்
குடல்களை
வெளியே
பிடுங்கி போடுகிறது !
கடன் காரனை போல
கொசுவும் ஆளை
கடித்து ரத்தம் குடிக்கிறது !
எதைப்பற்றியும்
கவலைப்படாமல்
பன்றி வளர்ப்பவன்
அவன் பாட்டுக்கு
அவன்
வேலையை பார்க்கிறான் ..!
கலைக்டருக்கு
மனு போடாலாம் என்றால் ,
ஊரே
எதிரியாகிவிடும்
என்ற பயம் வேறு ,
அவனை
அடிக்கடி
எச்சரித்தும்
ஏதும் கண்டு கொள்ளதவனாய் போக,
சுகாதார துறை அலுவலரை
சந்திக்க
கிளம்பி கொண்டிருந்தேன்..!
காதருகே
வந்து
என் மனைவி கிசுகிசுத்தாள்!
இந்த பன்றியை
வளர்த்து விற்றுதான்
இவனின்
சின்ன மகளின்
கல்யாணத்திற்கு சீர்
செய்ய வேண்டுமாம்.!"
மீண்டும்
நான் -
பன்றியின் சாக்கடை நாற்றத்தோடு...
பழக துவங்கி விட்டேன்.
வழக்கம்போல,
முன்பை காட்டிலும்
அதிகமாக.
ஒரு சில இடங்களில்
பன்றி வளர்க்கிறார்கள்
பிழைப்பதற்கு
வேறு வழி தெரியாமல்...
இந்த தெரு மட்டும்
சற்று
சுகாதாரமாக இருக்கிறது ..!
ஆனால்
விதிவிலக்காக
ஒருவன் மட்டும்
பன்றி வளர்க்கிறான் !
குழந்தைகள் நிறைந்த
குடியிருப்பு பகுதிதான் ...
நோய் வரும் என்ற
விழிப்புணர்ச்சி இருந்தும்
குடிசை போட்டுபோட்டு
பன்றி வளர்க்கிறார்கள் ..!
ஊராட்சி தலைவரின்
ஒத்துழைப்போடு,
இரவெல்லாம்
ஒரே சத்தம் !
பன்றிகள்
ஒன்றோடொன்று
கடித்து குதறிக்கொண்டு
பயங்கரமான
பெருத்த கூக்குரல் ...
பக்கத்திலுள்ளவர்களுக்கெல்லாம்
பெருத்த அசௌகரியம் !
அவன் ஒன்றும் பெரிய தாதா இல்லை!
அவனிடம்
இதை -
யார் கேட்பது
என்பதில்தான் பிரச்சினை.
மழைக்காலங்களில்
அவ்விடம் முழுதும்
சாக்கடையும்,
சகதியுமாய்
ஆகிவிடுகிறது!
அண்டை வீட்டிலுள்ளவர்களின்
குடல்களை
வெளியே
பிடுங்கி போடுகிறது !
கடன் காரனை போல
கொசுவும் ஆளை
கடித்து ரத்தம் குடிக்கிறது !
எதைப்பற்றியும்
கவலைப்படாமல்
பன்றி வளர்ப்பவன்
அவன் பாட்டுக்கு
அவன்
வேலையை பார்க்கிறான் ..!
கலைக்டருக்கு
மனு போடாலாம் என்றால் ,
ஊரே
எதிரியாகிவிடும்
என்ற பயம் வேறு ,
அவனை
அடிக்கடி
எச்சரித்தும்
ஏதும் கண்டு கொள்ளதவனாய் போக,
சுகாதார துறை அலுவலரை
சந்திக்க
கிளம்பி கொண்டிருந்தேன்..!
காதருகே
வந்து
என் மனைவி கிசுகிசுத்தாள்!
இந்த பன்றியை
வளர்த்து விற்றுதான்
இவனின்
சின்ன மகளின்
கல்யாணத்திற்கு சீர்
செய்ய வேண்டுமாம்.!"
மீண்டும்
நான் -
பன்றியின் சாக்கடை நாற்றத்தோடு...
பழக துவங்கி விட்டேன்.
வழக்கம்போல,
முன்பை காட்டிலும்
அதிகமாக.
No comments:
Post a Comment