கடைசி செமஸ்டருக்கான தொகையை கட்டுவதற்கு கடைசி தேதி நாளையோடு முடிகிறது பணம் ரெடி பண்ணிட்டியா அப்பா ? என்று சென்னையிலிருந்து ராஜேஷிடம் மகன் செல்பேசியில் பேசினான் மகன் அருண். அவனுடைய பேச்சில் மெல்லிதாக சோகம் இழையோடியது.
அப்பாவின் நிலைமை அருணுக்கு நன்கு தெரியும். தன்னுடைய படிப்புக்காக அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருக்கிறார். தனது உயர் கல்வியை வெற்றிகரமாக முடிப்பதற்காக, தனது சிறு சம்பாத்தியம் போக நிறைய இடங்களில் பலபேரிடம் கடன் வாங்கிவிட்டு சரியான நேரத்தில் திருப்பிக்கொடுக்க முடியாமல் எவ்வளவோ அவமானப்பட்டிருக்கிறார். எப்படியாவது இந்த ஆண்டு உயர்கல்வியை முடித்துவிட்டால்,அதன் பின்பு அப்பாவுக்கு ஓய்வு கொடுக்கவேண்டும் என அருண் மனதுக்குள் நினைத்துக்கொண்டு கடுமையாக படித்து வருகிறான். இது ராஜேஷுக்கும் நன்கு தெரியும்.
அதனால்தான் எப்படியாவது அருணை படிக்கவைத்தே ஆகவேண்டும் என்பதற்காக தொடர்ந்து எவ்வளவு கஷ்டமான நிலையிலும் தொடர்ந்து அருணுக்கு முடித்தவரை கையில் கிடைத்தவற்றை. பணம் அனுப்பி வைக்கிறார்.
ஆனாலும் நாளைக்கு கடைசி செமஸ்டருக்கான பணம் அனுப்பியே தீரவேண்டும் என்ற நிர்பந்தம் ராஜேஷுக்கு மனதுக்குள் கலங்கடிக்க செய்தது. காலையில் வீட்டைவிட்டு வெளியே கிளம்பிய ராஜேஷ், ஊரெல்லாம் சுற்றி தெரிந்த முகம் ,தெரியாத முகம் என பலபேரிடம் கடன் கேட்டு,எல்லாரும் கையை விரித்துவிடவே மாலைவேளை வீட்டுக்கு திரும்பினான்.
அப்போது ராஜேஷின் நண்பர் முருகேசன் வழக்கம்போல அவரைக் காணவந்தவர் ,ராஜேஷின் வீட்டின் திண்ணையில் அமர்ந்து கொண்டு ராஜேஷின் அம்மா பார்வதியம்மாளிடம் பேசிக்கொண்டிருந்தார்.அவர்களின் உரையாடலில் குறுக்கிட விரும்பாத ராஜேஷ், வீட்டின் முன் மர நிழலில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து சாய்ந்து யோசிக்க ஆரம்பித்தார்.அடுத்து என்ன செய்ய போகிறோம் என்பது தெரியாமல் அவர் மனம் கவலையில் தோய்ந்தது.
ஒரு வேளை பணம் கட்ட முடியவில்லை என்றால் தனது மகன் கடசி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் போகும், அதனால் மகனின் கல்வி வாழ்க்கை பாதிக்கப்படலாம். அதை நினைத்தாலே அவரின் இதய துடிப்பு அதிகரித்தது.
அவரின் சிந்தனையை கலைக்கும் விதமாக ராஜேஷின் தோளில் கைகளின் விரல்கள் ஊர்வதைக்கண்டு திரும்பி பார்த்தார். முருகேசன் புன்னகைத்தவாறு நின்று கொண்டிருந்தார். கந்தசாமியின் கைகளை பிடித்து, அதில் சிறு பணக்கற்றையை வைத்து
“எல்லாம் எனக்குத்தெரியும் !” அம்மா எல்லாத்தையும் சொன்னாங்க!”
மொதல்ல பையனுக்கு பரீட்சைக்கு பணம் கட்டுங்க,பின்னர் பார்க்கலாம் !” என்றவர் ,தனது பைக்கை ஸ்டார்ட் செய்து புன்னகைத்தவாறு சென்றார். முருகேசன் சென்ற திசையையை பார்த்தவாறு அமர்ந்திருந்தார் ராஜேஷ்.

No comments:
Post a Comment