Monday, 24 December 2018

குருதி வாடை

நாட்களின் நகர்வால்
விரல்  நகங்களுக்கிடையில்
குருதி வாடை.


நம்பிக்கை  நூல்களின்
ஒரு முனையை
நான் பிடித்துக்கொள்ள,
மறு
முனையில்
நீ  பிடித்து  கொள்ள ,
வாழ்க்கையின் பரிமாணத்தை
மெள்ள மெள்ள
அளவெடுக்க  துவங்கினோம் !

துவக்கம்
புது   அனுபவமாய் இருந்தது !
வருடங்களின் வேகமான பயணிப்பில்
இருவரும்
இருவேறு  திசைகளின் கதவுகளில்
நம்
கனவுகளின் பதிவுகளை
கண்ணீரால்  எழுதிக்கொண்டிருந்தோம்  !


இடை இடையே
பசி
நோய்
மரணம்
என-
தேய்வுகளை கடந்தே
நீயும் நானும்
பயணிக்க வேண்டியிருந்தது !

அனுபவங்களின் பதிவுகளில்
அவ்வபோது -
திருத்தம் செய்ய
வேண்டியிருந்தது !

நம்  மீது
சுமத்தப்பட்ட  இடைவெளிகள்
விரிந்து  கொண்டேயிருக்க...
காலங்களின்
உடை மாற்றும் படலம்
அரங்கேறி கொண்டிருந்தன !

நீயும்
நானும்
உண்மையுமாய் ...
பொய்மையாய் ...


நீயும்
நானும்
தீயுமாய் ...
கண்ணீருமாய் ...

நீயும்
நானும்
விண்    மீனும் ...
ஆகாயுமாய் ...

நீயும்
நானும்
பசியும்...
உணவுமாய் ...

நீயும்
நானும்
நதியுமாய் ...
கரையுமாய்...

மவுனத்தின் நிசப்த்தத்தில்
தீயை தின்று
ஒளியை உமிழ்கின்ற
ஒரு மெழுகாய் ...

நீயும்
நானும்
அருகருகே
தொடரும்   இடைவெளிகளில்
சமூக கடமைகளை சுமந்து  ஊமைகளாய் ...

No comments:

Post a Comment