Saturday, 29 December 2018

பிம்பங்களின் நாற்றம்

இந்த கணத்தை
மிகவும் எச்சரிக்கையாக
உள்வாங்கு என
உள்மனம் குறுகுறுக்கிறது !

காற்றும் புயலும்
விடாமல் மாறி மாறி
திசைகளை  மூடி மறைத்து
திக்கு முக்காட வைக்கின்றன!
ஒருகணம்
சிந்தித்து மீள்வதற்குள்
தொலை தூரத்தில்  என்னை
வீசியெறிகின்றன !
யாராவது கை  கொடுக்க மாட்டார்களா என
அடிமனதின்  பலகீனம்
அரித்தெடுக்கிறது !

எனினும்
சமூக நிதர்சனம்
முன்பே  உறுதிப்படுத்தப்பட்ட
எதார்த்தத்தை மேலும் 
உறுதிப்படுத்தின !

சேரும் சகதியும்
உடலெல்லாம் வியாபிக்க
சகிக்க இயலாத
பிம்பங்களின் நாற்றம்
சகிப்பின் எல்லைக்கும்
சவாலாய்  இருந்தது !

அறிவுக்கும்
உணர்ச்சிக்கும்  நடக்கும் 
சமகால போட்டியில்
தகிப்பின் விளிம்பில்
ஒற்றைப்பனையாய்
நிற்கிறேன் 
தனிமையின் நிழலில்  !

No comments:

Post a Comment