Friday, 1 February 2019

பிழை வானம்


Image result for drought i இன் மாடர்ன் paintings
வரகு விளைஞ்ச கொல்லை 
வாய்க்கு சோறு தந்த கொல்லை !
கம்பு வெளைஞ்ச கொல்லை 
களையாற தின்ன கொல்லை !
சோளம் வெளைஞ்ச கொல்லை
சோத்து பஞ்சம் தீர்த்த கொல்லை!
முந்தரிக் காடாய் ஆனதண்ணே
மழை வற்றி போனதண்ணே !

தண்ணீர் தேங்கும் குளமெல்லாம்
மண்மூடி வீடாய் கிடக்குதண்ணே !
நீர்வழிப் பாதை யெல்லாம்
நிலமாய் மாறிப் போச்சுதண்ணே!
மந்தைவெளி புறம்போக்கெல்லாம்
வீட்டுமனை பட்டாவாய் ஆச்சண்ணே!
ஆடுமாடு மேய்க்க வழியில்லாமல்
அனைத்தும் குடியிருப்பாய் ஆச்சண்ணே !

பார்க்கும் வெளி யெல்லாம்
தைல மரக்காடுகள் !
பார்க்கும் வெளியெங்கும்
சீமை கருவேல மரங்கள் !
பாதம் படுமிட மெல்லாம்
பார்த்தீனியம் செடிகள் !
நீக்கமற நிறைந்திருக்கும்
நெய்வேலி காட்டாமணக்கு !

வரகுசோறு தின்னும் வரைக்கும்
சர்க்கரை நோய் வந்ததில்லே!
சோளச்சோறு தின்னும் வரைக்கும்
சத்து பத்து குறையவில்லை !
கேப்பைகளி தின்னும் வரைக்கும்
தொந்தி தொப்பைக்கு வழியில்லே !
அரிசி சோறு தின்னதாலே
எல்லா சீக்கும் வந்ததண்ணே !

No comments:

Post a Comment