Monday, 24 December 2018

அஞ்சலி

செத்துப்போன  மனிதரின்
முதலாம் ஆண்டு
நி னைவு   அஞ்சலி !
சூடம் .
சாம்பிராணி .
ஊது பத்தி .
விதவிதமான  இனிப்பு .
அறுசுவை .
விருந்து  படையல்கள் !
அருமை பெருமைகளை
நினைவு  கூறும்  சொற்பொழிவுகள் !
ஆனால் -
மாண்டவரின்  ஆன்மா
என்னவோ
கோர  பசியோடு
சுவற்றில்
ஆணி  அடித்து  மாட்டப்பட்டிருந்தது  !




No comments:

Post a Comment